Cricket, Virat Kohli, D/L Method, India, Australia

நேற்றைய தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராத் கோலி ஆட்டத்தின் முடிவிற்க்குப் பிறகு விளக்கங்களை அளித்தார். ஆஸ்திரேலிய அணி நேற்று சற்று நன்றாகவே ஆடியதாக தேரிவித்தார் விராட் கோலி.

நிரூபர் கேள்வி : 3 போட்டிகள் வென்ற பின்னர் திடீரென தோற்றது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தோல்வி காரணம் விராட் கோலி கூறுவது என்ன? பாண்ட்யா இனிமேல் அந்த இடத்தில் தான் பேட்டிங் பிடிப்பார்!! 1
ரோகித் (65) ரன்-அவுட்டானார். கூல்டர் ‘வேகத்தில்’ கோஹ்லி (21) சிக்கினார்.

விராட் கோலி : இது இயல்பு தான், நாம் நினைத்தது எப்போதும் நடக்காது, நாம் நன்றாக போராடினாலும் நேற்றைய நாள் அவர்களுடையதாகிவிட்டது. சரியான நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்து விட்டார்கள், குறிப்பாக இறுதிக் கட்டத்தில் அவர்களது பந்து வீச்சாளர்கள் சற்று சிறப்பாகவே செயல் பட்டனர். அதற்க்காக நாம் மோடமாக விளையாடினோம் என்று கூறவில்லை.

நிரூபர் கேள்வி : நமது பந்து வீச்சாளர்களிடம் என்ன கிடைத்தது? முன்னேற்றம் தெரிகிறதா?

தோல்வி காரணம் விராட் கோலி கூறுவது என்ன? பாண்ட்யா இனிமேல் அந்த இடத்தில் தான் பேட்டிங் பிடிப்பார்!! 2
ஒரு சிக்சர் விளாசிய தோனியும் (13) அணியை கைவிட்டார். கூல்டர் பந்தில் அக்சர் (5) வெளியேறினார். இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 313 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

கடந்த பல வருடங்களை விட சற்று முன்னேற்றம் அடைந்து சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த போட்டியில் முகமது சமி மற்றும் உமீஷ் யாதவ் நன்றாக பந்து வீசினர். அவர்கள் ஸ்லோ பால் வீசி விக்கெட்டுகளை எடுத்தது மிகவும் அற்புதமான ஒன்று. அது போன்ற பந்துகள் தான் ஆட்டத்தை தீர்மாணிக்கும். அவர்கள் இருவரும் வீசிய பந்துகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

 

நிரூபர் கேள்வி : பாண்டியாவை அந்த இடத்தில் இறக்கி விட காரணம் என்ன? அந்த சூது நகர்வு பலிக்கவில்லை ஏன்? தோனியை அந்த இடத்தில் இறக்கி விடிருந்தால் அணிக்கு பலன் கிடைத்திருக்குமே?

விராட் கோலி : கடந்த போட்டியில் அது போன்ற ஒரு நகர்வு பலித்தது. இந்த போட்டியில் அது தவறாகச் சென்று பலிக்காமல் போய்விட்டது. இனி வரும் காலங்களில் பாண்டியாவை அந்த 4ஆவது விக்கெட்டிற்க்கு  நிரந்தரமாக இறகி விட பல வாய்ப்புகள் இருக்ககிறது.

கடந்த ஜூலை 2ல் வெஸ்ட் இண்டீசிடம் (இடம்-ஆன்டிகுவா) இந்தியா தோல்வியடைந்தது. பின், எழுச்சி கண்ட கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் (1), இலங்கை (5 ), ஆஸ்திரேலியாவை (3) வீழ்த்தி தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. இன்றைய போட்டியிலும் வென்றிருந்தால் முதல் முறையாக ஒரு நாள் அரங்கில் தொடர்ந்து 10 வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கலாம்.

தோல்வி காரணம் விராட் கோலி கூறுவது என்ன? பாண்ட்யா இனிமேல் அந்த இடத்தில் தான் பேட்டிங் பிடிப்பார்!! 3
வார்னர் ஒரு நாள் அரங்கில் 14வது சதம் அடித்தார். இவர் 124 ரன்களில் ஆட்டமிழந்தார். உமேஷ் ‘வேகத்தில்’ பின்ச் (94), கேப்டன் ஸ்மித் (3) சிக்கினர். டிராவிஸ் ஹெட் 29 ரன்களில் அவுட்டானார்.

இந்திய அணி தொடர்ந்து 10 ஒரு நாள் போட்டியில் வென்று சாதனை படைக்கும் வாய்ப்பை நழுவவிட்டது. நான்காவது ஒரு நாள் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. 4-வது ஒருநாள் போட்டியில், வெற்றி பெற்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது

இத்தொடரில் ஆஸ்திரேலியா முதல் வெற்றியை பதிவு செய்தது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி வரும் அக்.,1ல் நாக்பூரில் நடக்கவுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *