தோனியின் வரலாற்று சாதனையை தகர்க்கப்போகும் கோலி!! 1

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2 டெஸ்ட்கள் கொண்ட தொடர் நாளை (22-8-19, வியாழன்) தொடங்கவுள்ள நிலையில் இந்தியாவின் தலைசிறந்த கேப்டனாகக் கருதப்படும் தோனியின் கேப்டன்சி சாதனையை முறியடிக்க கோலிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி என்பதாலும் மே.இ.தீவுகள் அணி தன் சொந்த மண்ணில் இங்கிலாந்தை வெற்றி பெற்றதும், புத்துயிர்ப்பு பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சும், பிட்சும் இந்திய அணிக்கு கடும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியை விராட் கோலி தலைமையில் இந்திய அணி வென்றால் 27 வெற்றிகளைப்பெற்று கோலி தோனியின் டெஸ்ட் வெற்றி எண்ணிக்கையைச் சமன் செய்வார்.

தோனியின் வரலாற்று சாதனையை தகர்க்கப்போகும் கோலி!! 2

60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்சி செய்த தோனி 27-ல் வெற்றியும் 18-ல் தோல்வியும் தழுவியுள்ளார். விராட் கோலி 46 டெஸ்ட்களில் 26 வெற்றிகளை பெற்றுள்ளார், முதல் டெஸ்ட்டை வென்றால் தோனியை சமன் செய்வார் கோலி.

2வது டெஸ்ட் போட்டியையும் வென்றால் தோனியின் சிறந்த கேப்டன் சாதனை என்பதும் முடிவுக்கு வந்து கோலிக்கு மகுடம் சூட்டப்படும்.

தாதா கங்குலி 49 டெஸ்ட் கேப்டன்சியில் 21 வெற்றிகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் வியாழக்கிழமை தொடங்கவுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஒரு பகுதியாக உள்ளது. ஆகவே இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் களமிறங்க உள்ளது.

தோனியின் வரலாற்று சாதனையை தகர்க்கப்போகும் கோலி!! 3

இந்நிலையில் இதுகுறித்து விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். அதில்,“டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அறிமுகத்திற்குப் பிறகு டெஸ்ட் போட்டிகள் மிகவும் கடினமாக இருக்கும். இந்த சாம்யின்ஷிப் போட்டிகள் சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் சுவராஸ்யமாக இல்லை என்று ரசிகர்கள் கருதுகின்றனர். என்னைப் பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளின் தரம் மிகவும் உயர்ந்துள்ளது.

மேலும் இந்திய அணியில் பேட்ஸ்மேன்களாக அனைவரும் ஒன்றிணைந்து சரியாக விளையாடவில்லை. தனித் தனியாக ஒரு சில வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும் ஒரு அணியாக நாங்கள் பேட்டிங்கில் சிறந்து விளையாடவில்லை.தோனியின் வரலாற்று சாதனையை தகர்க்கப்போகும் கோலி!! 4 டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் செய்வது சற்று கடினம் தான். தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் வந்திருப்பதன் மூலம் பேட்டிங் இன்னும் சவாலாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு முடிவும் அணியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதால் பேட்டிங் முக்கியத்துவமானதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *