சச்சின் கூட நினைத்து பார்க்காத சாதனையை படைத்த 'ரன் மெஷின்' விராட்கோலி! 1

2010-2019 வரையிலான 10 ஆண்டுகளில் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலிடத்தில் இருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில், கடந்த 10 ஆண்டுகளில் (2010–2019 வரையிலான காலகட்டம்) டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி–20 போட்டிகள் என, மூன்று வித போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

சச்சின் கூட நினைத்து பார்க்காத சாதனையை படைத்த 'ரன் மெஷின்' விராட்கோலி! 2

இதில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 386 போட்டியில் விளையாடி 20,960 ரன்கள் குவித்தார். குறிப்பாக, 69 சதம், 98 அரைசதம் அடித்து அதிலும் முதலிடத்தில் இருக்கிறார். இது மட்டுமல்லாது, 2090 பவுண்டரிகள் மற்றும் 208 சிக்சர் விளாசி இருக்கிறார்.

‘ரன் மெஷின்’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் டெஸ்டில் 84 போட்டிகளில் ஆடி 7202 ரன்களும், 227 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11,125 ரன்களும், 75 சர்வதேச டி–20 போட்டிகளில் 2,633 ரன்களும் அடித்துள்ளார்.

சச்சின் கூட நினைத்து பார்க்காத சாதனையை படைத்த 'ரன் மெஷின்' விராட்கோலி! 3

விராட்கோலிக்கும் இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்கா வீரர் ஹாசிம் ஆம்லாவிற்கும் கிட்டத்தட்ட 5000 ரன்கள் வித்தியாசம் இருக்கின்றன. ஹாசிம் ஆம்லா 15,185 ரன்கள் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்தின் ஜோ ரூட் இந்த காலகட்டத்தில் 14,031 ரன்கள் அடித்து மூன்றாம் இடத்தில் இருக்கிறார். இப்பட்டியலில் இருக்கும் மற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மா 12,782 ரன்கள் அடித்து 8வது இடத்தில் இருக்கிறார்.

சச்சின் கூட நினைத்து பார்க்காத சாதனையை படைத்த 'ரன் மெஷின்' விராட்கோலி! 4

இக்காலகட்டத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், 397 சிக்ஸர்களுடன் ரோகித் சர்மா முதல் இடத்தில இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தசாப்தத்தில் அனைத்துவித போட்டிகளும் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்:

  1. விராட் கோஹ்லி (இந்தியா) – 386 போட்டிகள் – 20,960 ரன்கள்
  2. ஹாசிம் ஆம்லா (தெ.ஆ.,) – 286 போட்டிகள் – 15,185 ரன்கள்
  3. ஜோ ரூட் (இங்கி.,) – 263 போட்டிகள் – 14,031 ரன்கள்
  4. கேன் வில்லியம்சன் (நியூசி.,) – 283 போட்டிகள் – 14,007 ரன்கள்
  5. டேவிட் வார்னர் (ஆஸி.,) – 259 போட்டிகள் 13,699 ரன்கள்
  6. ராஸ் டெய்லர் (நியூசி.,) – 301 போட்டிகள் – 13,183 ரன்கள்
  7. ஏபி டி வில்லியர்ஸ் (தெ.ஆ.,) – 250 போட்டிகள் – 12,820 ரன்கள்
  8. ரோகித் சர்மா (இந்தியா) – 302 போட்டிகள் – 12,782
  9. குமார் சங்ககரா (இலங்கை) – 224 போட்டிகள் – 12,017
  10. ஏஞ்சலோ மாத்யூஸ் (இலங்கை) – 333 போட்டிகள் – 11,670 ரன்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *