Cricket, PSL, Virat Kohli
எல்லாருமே இப்படி பட்டைய கிளப்புறாங்களே…. மகிழ்ச்சியில் மாஸ்டர் பிளாஸ்டர்

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் வெற்றிக்கு கேப்டன் கோஹ்லியும், இந்திய அணியின் பந்துவீச்சாளர்களும் தான் மிக முக்கிய காரணம் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

எல்லாருமே இப்படி பட்டைய கிளப்புறாங்களே…. மகிழ்ச்சியில் மாஸ்டர் பிளாஸ்டர் !! 1

இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு கேப்டன் கோஹ்லி தனது அபார பேட்டிங் மூலம் கைகொடுத்தார். இந்த தொடரின் 6 போட்டிகளிலும் சேர்த்து கோஹ்லி 588 ரன்கள் குவித்து சாதனையும் படைத்தார்.

இந்நிலையில்  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் கடவுள் என்று போறப்படுவருமான சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,  தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றதற்கு கேப்டன் கோஹ்லியும் பந்துவீச்சாளர்களும் தான் மிக முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார்.

எல்லாருமே இப்படி பட்டைய கிளப்புறாங்களே…. மகிழ்ச்சியில் மாஸ்டர் பிளாஸ்டர் !! 2

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு சச்சின் அளித்துள்ள பேட்டியில், இந்திய அணியில் குறை சொல்லும் அளவிற்கு யாரும் இல்லை. தற்போதைய இந்திய அணியை பார்த்தால் மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு வீரரும் மெட்ச் வின்னராக திகழ்கிறார்கள்.

நான் விளையாடி காலமும் தற்போதும் வேறு விதமாக உள்ளது. நான் விளையாடிய போது இருந்த மைதானத்தின் தன்மைகள் வேறு இப்பொழுது இருக்கும் மைதானங்களின் தன்மை வேறு. அதனால் அப்போதைய கிரிக்கெட்டையும் தற்போதைய கிரிக்கெட்டையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது.

எல்லாருமே இப்படி பட்டைய கிளப்புறாங்களே…. மகிழ்ச்சியில் மாஸ்டர் பிளாஸ்டர் !! 3

தனது 100 சதங்களை கோஹ்லி முறியடிப்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்த சச்சின் “சாதனை என்பது ஒருவரின் சாதனையை மற்றொருவர் முறியடிப்பது தான், அது தான் இயல்பும் கூட, என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *