கெய்லை பஞ்சாப் அணியில் எடுத்ததற்கு இது தான் காரணம்; சேவாக் சொல்கிறார்
யாருமே விலை கொடுத்து வாங்க முன்வராத விண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்லை, பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்ததற்கான காரணத்தை அந்த அணியின் ஆலோசகரான விரேந்திர சேவாக் தெளிபடுத்தியுள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.
சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.
இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ள நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் நடைபெற்றது.
இதில் சிக்ஸருக்கு பெயர் போன விண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்லை, முதல் நாள் ஏலத்தில் எந்த அணியும் அவரது அடிப்படை விலையை கொடுத்து கூட வாங்க முன்வரவில்லை, இரண்டாம் நாளின் கடைசி நேரத்தில் பஞ்சாப் அணி அவரது அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாயை கொடுத்து ஏலத்தில் எடுத்து கொண்டது.

Photo by Ron Gaunt / IPL / SPORTZPICS
இந்நிலையில் பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் எடுக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை அந்த அணியின் ஆலோசகரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான விரேந்திர சேவாக் விளக்கியுள்ளார்.
இது குறித்து பேசிய சேவாக் “ கிறிஸ் கெய்லை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது எனக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் எதிரணிகளுக்கு எந்த வகையான ஆபத்தான பேட்ஸ்மேன் என்பது ஒவ்வொரு அணிக்கும் தெரியும், இருந்த போதும் ஏன் எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை என்பது எனக்கு தெரியவில்லை, யாரும் எடுக்காததன் காரணமாகவே நாங்கள் அவரை எடுத்து கொண்டோம். அவர் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.