India, Cricket, Pakistan, Virender Sehwag, Virender Sehwag tweets, Champions Trophy

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை, முன்னாள் அதிரடி மன்னன் சேவக், தனது வழக்கமான ஸ்டைலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் சேவக். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் தற்போது விமர்சகராகவும், டுவிட்டர் பிரபலமாகவும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹர்டிக் பாண்டியா, இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி புகழ் பெற்றார். பிறகு இந்திய அணியில் இடம் கிடைத்த பிறகு அவருக்கு கிடைத்த வாய்ப்பை வீணாக்கவில்லை. கடைசி நேரத்தில் வந்தால் சிக்ஸர் விளாசுதல், பந்துவீச்சில் முக்கியமான விக்கெட்டுகளை எடுப்பது, பீல்டிங்கில் பறந்து பறந்து பிடித்து அசத்துவது என சிறப்பாக செயல் படுகிறார்.

இவர், இன்று தனது 24வது பிறந்தநாளை கொண்டாடும், இந்திய இளம் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிற்கு தனது வழக்கமான காமெடி ஸ்டைலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேவக் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,’ நவீன கிரிக்கெட் உலகின் சிறந்த சிக்சர் மன்னனான எனது குங்பூ பாண்டியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *