நான் ஜெயிச்சு கொடுத்தேன்னு நெனைக்காதீங்க.. ஜடேஜாவும் இல்லை.. உண்மையான வெற்றி இவரால தான் வந்துச்சு - முக்கியமான வீரரை குறிப்பிட்ட கேஎல் ராகுல்! 1

ஜடேஜா உள்ளே வந்தபின் எனது வேலை மிகவும் எளிதாகியது. ஆனால் போட்டியை வெற்றி பெற்று கொடுத்ததற்கு முக்கிய காரணம் முகமது ஷமி தான் என்று பேசியுள்ளார் கேஎல் ராகுல்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசியது இந்திய அணி. அபாரமான துவக்கத்தை பெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு மிச்சல் மார்ஸ் 81 ரன்கள் 65 பந்துகளில் விலாசி, இந்திய பந்துவீச்சாளர்களை திக்குமுக்காட வைத்தார். ஆனால் சற்றும் சளைத்துவிடாமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தினர் இந்திய பந்துவீச்சாளர்கள்.

நான் ஜெயிச்சு கொடுத்தேன்னு நெனைக்காதீங்க.. ஜடேஜாவும் இல்லை.. உண்மையான வெற்றி இவரால தான் வந்துச்சு - முக்கியமான வீரரை குறிப்பிட்ட கேஎல் ராகுல்! 2

குறிப்பாக, முகமது ஷமி மற்றும் ஜடேஜா இருவரும் மிடில் ஓவர்களில் வரிசையாக விக்கெட்டுகளை வீழ்த்தினர். கடைசியில் சிராஜ் அபாரமாக பந்துவீச, 128/2இல் இருந்து 188 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட் ஆவதற்கு உதவினர்.

பார்ப்பதற்கு எளிய இலக்கு போல தெரிந்தாலும் இதை இந்திய அணி சேஸ் செய்வதற்கு சற்று கடினமாகவே இருந்தது. 39 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் நன்றாக ஆடிவந்த ஹர்திக் பாண்டியா 25 ரன்களில் அவுட்டாகியதால் 83 ரன்களுக்கு 5வது விக்கெட்டையும் இழந்து தடுமாறியது.

நான் ஜெயிச்சு கொடுத்தேன்னு நெனைக்காதீங்க.. ஜடேஜாவும் இல்லை.. உண்மையான வெற்றி இவரால தான் வந்துச்சு - முக்கியமான வீரரை குறிப்பிட்ட கேஎல் ராகுல்! 3

பின்னர் ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். மிகவும் பொறுப்புடன் விளையாடிய கேஎல் ராகுல் 91 பந்துகளில் 75 ரன்கள் அடித்தார். இந்த அரைசதம் இந்திய அணிக்கும், தனிப்பட்ட முறையில் கேஎல் ராகுலுக்கும் உதவிகரமாக இருந்தது.

போட்டி முடிந்த பிறகு எதிரணி பவுலிங் பற்றி பேட்டி அளித்த அவர் கூறுகையில்,

“மிச்சல் ஸ்டார்க் நன்றாக ஸ்விங் செய்து ஆரம்பத்திலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஆகையால் பெரிதாக ஷார்ட்டுகள் எதுவும் ட்ரை செய்யாமல் சாதாரணமான பேட்டிங்கை வெளிப்படுத்தினேன். அந்த நேரத்தில் சில பவுண்டரிகள் வந்தது எனது பதட்டத்தை குறைத்தது  சுப்மன் கில், ஹர்திக், ஜடேஜாவுடன் பேட்டிங் செய்தபோது, பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கிறது. பவுலர்களை கட்டுப்படுத்த விடாமல் ரன்களை எடுக்கலாம் என திட்டமிட்டு ஆடினோம்.” என்றார்.

ஷமி பவுலிங் தான் வெற்றிக்கு துவக்கப்புள்ளி எனவும் கேஎல் ராகுல் பேசினார். அவர் கூறியதாவது: “இந்திய அணி பந்துவீசுவதற்கு களமிறங்கையில், பிட்சில் எந்தவித உதவியும் இல்லை. முகமது ஷமி தனது இரண்டாவது ஸ்பெல் வீசும்பொழுது விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தை அணியின் பக்கம் திருப்பினார். மிடில் ஓவர்களில் அதிகளவில் விக்கெட்டுகளை எடுக்கும் அணியால் தான் வெற்றிபெற முடியு. அதை முகமது ஷமி மிகச்சரியாக செய்தார். பந்துவீச்சிற்கு எடுபடாத நேரத்தில் அவர் உதவியிருக்கிறார்.

 

நான் ஜெயிச்சு கொடுத்தேன்னு நெனைக்காதீங்க.. ஜடேஜாவும் இல்லை.. உண்மையான வெற்றி இவரால தான் வந்துச்சு - முக்கியமான வீரரை குறிப்பிட்ட கேஎல் ராகுல்! 4

ஜடேஜாவுடன் பார்ட்னர்ஷிப் பற்றி பேசிய கேஎல் ராகுல்,

“பேட்டிங்கில் ஜடேஜா உள்ளே வந்த பிறகு, எனக்கு சில மோசமான பந்துகள் கிடைத்தது. அதை பயன்படுத்தி பவுண்டரிகள் அடித்தேன். இடது கை – வலது கை பேட்டிங் காம்போ எதிரணி பவுலர்களை நன்றாக குழப்புவதற்கு உதவியது. ஜடேஜா மிகச்சிறந்த ஃபார்மில் இருந்தார். உள்ளே வந்ததிலிருந்து ரன்களை எடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஆடினார். சிங்கிள், டபுள் என ஓடிக்கொண்டே இருந்தோம். அவரின் பொறுப்பான ஆட்டம் பார்ட்னர்ஷிப் அமைக்க, கூடுதல் நேரம் போட்டியை எடுத்துச் செல்ல உதவியது.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *