இது தான் நடக்கும்னு எனக்கு அப்பவே தெரியும்; க்ரூணல் பாண்டியா ! 1

மும்பை இந்தியன்ஸ் அணி தன்னை நிச்சயம் ஏலத்தில் எடுக்கும் என்ற நம்பிக்கை தனக்கு முன்பே இருந்ததாக க்ரூணல் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.

இது தான் நடக்கும்னு எனக்கு அப்பவே தெரியும்; க்ரூணல் பாண்டியா ! 2

இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ள நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில்   நடைபெற்றது.

இதில் ஹர்திக் பாண்டியாவின் சகோதரரான க்ரூணல் பாண்டியாவை 8.8 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியே மீண்டும் ஏலத்தில் எடுத்தது.

இது தான் நடக்கும்னு எனக்கு அப்பவே தெரியும்; க்ரூணல் பாண்டியா ! 3

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள க்ரூணல் பாண்டியா., மும்பை இந்தியன்ஸ் அணி தன்னை கைவிடாது என்பது தனக்கு முன்பே தெரியும் என்று க்ரூணல் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இது தான் நடக்கும்னு எனக்கு அப்பவே தெரியும்; க்ரூணல் பாண்டியா ! 4

 

இது குறித்து பேசிய க்ரூணல் பாண்டியா.,  “மும்பை இந்தியன்ஸ் அணி தான் என்னை இந்த முறையும் ஏலத்தில் எடுக்கும் என்பது எனக்கு முன்பே தெரியும், அதுவும் ஆர்.டி.எம் கார்டை பயன்படுத்தி தான் தன்னை தக்க வைக்கும் என்பதும், இந்த முறை எனக்கான விலை கோடிக்கணக்கில் கூடும் என்பதும் நான் எதிர்பார்த்ததே. கடந்த தொடர்களை போல் இந்த தொடரில் என்னால் முடிந்த வரையில் சிறப்பாக செயல்படுவேன்”  என்று தெரிவித்துள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *