இதுக்கு மேல நான் செய்ய முடியும்..? சூர்யகுமார் யாதவ் வேதனை !! 1

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் தனது பெயர் இடம்பெறாது ஏமாற்றத்தை கொடுத்ததாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் மூலம் பிரபலமடைந்த இளம் வீரர்களில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் மிக முக்கியமானவர்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், யூசுப் பதானில் இருந்து தற்போது நடராஜன் வரை பலர் இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியில் இதுவே இடமே கிடைக்கவில்லை.

இதுக்கு மேல நான் செய்ய முடியும்..? சூர்யகுமார் யாதவ் வேதனை !! 2

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒவ்வொரு வெற்றியிலும் மிக முக்கிய பங்காற்றி வருகிறார். இந்த வருட ஐபிஎல் தொடரிலும் மிக சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவிற்கு, ஆஸ்திரேலிய அணியுடனான தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்றே அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. நடராஜன், வருண் சக்கரவர்த்தி போன்ற இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைத்த போதிலும், சூர்யர்குமார் யாதவிற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

இந்தநிலையில், சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் தனது பெயர் இடம்பெறாதது ஏமாற்றத்தை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதுக்கு மேல நான் செய்ய முடியும்..? சூர்யகுமார் யாதவ் வேதனை !! 3

இது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், “ஆஸ்திரேலிய தொடருக்கான அணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து என்னால் நிலையாக இருக்க இயலவில்லை. முடிந்த வரை என்னை அந்த எண்ணத்தில் இருந்து விலக்கி வைத்துக் கொள்ள முயற்சித்தேன். அதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டேன். ஆனாலும் அதுகுறித்த எண்ண ஓட்டத்தை தவிர்க்க முடியவில்லை.

எனது ஏமாற்றத்தை ரோகித் சர்மாவிடம் வெளிப்படையாக வெளிப்படுத்தினேன். அதற்கு அவர், தற்போதைய நிலையில் நீ சிறப்பாக செயல்பட்டு வருகிறாய். இந்திய அணிக்கு தேர்வாகாதது குறித்து யோசிக்காமல் ஐ.பி.எல். போட்டியில் தற்போது எவ்வாறு சிறப்பாக ஆடி வருகிறாயோ அதைத்தொடர்ந்து அப்படியே கடைபிடி. உனக்கான நேரம் வரும்போது வாய்ப்பு கிடைக்கும் என்றார். அவரின் வார்த்தைகளே எனக்கு ஆறுதலையும், உத்வேகத்தையும் கொடுத்தது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *