ஏண்டா இப்படி செஞ்சீங்க..? இந்திய வீரர்கள் மீது வாசிங்டன் சுந்தரின் தந்தை கோபம் !! 1

இங்கிலாந்து அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் வாசிங்டன் சுந்தர் சதம் அடிக்க ஒத்துழைப்பு கொடுக்காத இந்திய அணியின் டெய்லேண்டர்களை, வாசிங்டன் சுந்தரின் தந்தை விமர்சித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது.

ஏண்டா இப்படி செஞ்சீங்க..? இந்திய வீரர்கள் மீது வாசிங்டன் சுந்தரின் தந்தை கோபம் !! 2

இரு அணிகளுக்கும் மிக முக்கியமான இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 205 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவை தவிர மற்ற அனைத்து சீனியர் வீரர்களும் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வாசிங்டன் சுந்தர் – ரிஷப் பண்ட் கூட்டணி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு மளமளவென ரன் குவித்தது.

ரிஷப் பண்ட் மற்றும் சுந்தரின் பொறுப்பான பேட்டிங் மூலமும், இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் மற்றும் அக்‌ஷர் பட்டேலின் துல்லியமான பந்துவீச்சின் மூலம் இந்திய அணி இந்த போட்டியில் அபார வெற்றி பெற்றிருந்தாலும், இந்த போட்டியில் மிக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாசிங்டன் சுந்தர் சதம் அடிக்கும் வாய்ப்பை வெறும் 4 ரன்களில் தவறவிட்டது அனைத்து ரசிகர்களுக்கும் மிகப்பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.

ஏண்டா இப்படி செஞ்சீங்க..? இந்திய வீரர்கள் மீது வாசிங்டன் சுந்தரின் தந்தை கோபம் !! 3

தான் விக்கெட்டை இழக்காத போதிலும், மறுமுனையில் களமிறங்கிய இஷாந்த் சர்மா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சில நிமிடங்கள் கூட தாக்குபிடிக்காமல் விக்கெட்டை இழந்ததால் சதம் அடிக்காமல் போனது குறித்து தனக்கு எந்த கவலையும் இல்லை என வாசிங்டன் சுந்தரே தெரிவித்திருந்தாலும், வாசிங்டன் சுந்தரின் தந்தையோ இந்திய டெய்லேண்டர்களை விமர்சித்துள்ளார்.

இது குறித்து வாசிங்டன் சுந்தர் பேசுகையில், “’டெய்ல் எண்டர்களால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அவர்களால் சிறிது நேரம் கூட தாக்குப்பிடித்து இருக்க முடியாதா? வெற்றிபெற 10 ரன்கள் தேவை எனும் சூழல் இருந்திருந்தால்கூட இது பெரிய தவறு அல்ல. லட்சக்கணக்கான இளைஞர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். டெய்ல் எண்டர்கள் என்ன செய்தார்கள் என்பதை அவர்கள் கற்றுக்கொள்ளக்கூடாது’’ என்று விமர்சித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *