இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !! 1

இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து

இளம் வீரரான ப்ரிதீவ் ஷா, முன்னாள் வீரர் சேவாக்கை போன்று திறமையானவர் என முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் முக்கிய வீரர்களில் ஒருவரான விரேந்திர சேவாக் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போனர். சேவாக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ரோஹித் சர்மா, ஷிகர் தவான் போன்ற சிறந்த துவக்க வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்திருந்தாலும், அவர்கள் அனைவரும் சேவாக்கிற்கு இணையானவர்களா என்று கேட்டால் அதற்கு விடை கிடைக்காது.

இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !! 2

இந்தநிலையில், இந்திய அணியின் இளம் துவக்க வீரர்களில் ஒருவரான ப்ரிதீவ் ஷா சேவாக்கை போன்று திறமையான வீரர் என முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் ஓபனாக தெரிவித்துள்ளார்.

ப்ரிதீவ் ஷா குறித்து வாசிம் ஜாபர் கூறியதாவது;

முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் போன்ற ஆட்டத்திறன் உடையவர் பிரித்வி ஷா. ஆனால் ஆட்டத்திற்கு வெளியே அவரது ஒழுங்கை அவர் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். “பிரித்வி ஷா ஒரு சிறப்பான வீரர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமமும் இல்லை. அவர் அடிக்கும் ஒவ்வொரு ஷாட்களும் சிறப்பானவை. இதேபோன்று அவர் விளையாடினால் வீரேந்திர சேவாக்கை போன்று ஆட்டத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவருக்கு இருக்கிறது” என்றார்.

இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !! 3

மேலும் பேசிய வாசிம் ஜாபர் “பிரித்வி ஷா ஆட்டத்தை இன்னும் சிறப்பாக புரிந்து கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் போது ஷார்ட் பந்துவீச்சில் ஒரே மாதிரி இரண்டு முறை அவர் ஆட்டமிழந்தார். ஆடுகளத்திற்கு வெளியே அவர் சற்று ஒழுங்குடன் இருக்க வேண்டும். சர்வதேச அளவில் அவர் ஒரு வெற்றியாளராக அவர் வருவதற்கு வாய்ப்புள்ளது” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *