இஷாந்த் சர்மா வேண்டாம்... இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்க; முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்த வாசிம் ஜாபர் !! 1

முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர் நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 25ம் தேதி துவங்க உள்ளது.

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்ததால், இந்த தொடரில் இந்திய அணியின் விளையாட்டை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இஷாந்த் சர்மா வேண்டாம்... இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்க; முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்த வாசிம் ஜாபர் !! 2

இரு அணிகள் இடையேயான முதல் போட்டி நாளை உள்ளதால், இரு அணி வீரர்களும் இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதே போல் சவால் நிறைந்த இந்த தொடருக்கான தங்களது எதிர்பார்ப்புகளையும் இரு அணியின் சீனியர் வீரர்களும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் சில முன்னாள் இந்திய வீரர்கள், முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது ஆடும் லெவனையும் தேர்வு செய்து வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

இஷாந்த் சர்மா வேண்டாம்... இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்க; முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்த வாசிம் ஜாபர் !! 3

வாசிம் ஜாபர் தனது ஆடும் லெவனின் துவக்க வீரர்களாக மாயன்க் அகர்வாலையும், சுப்மன் கில்லையும் தேர்வு செய்துள்ளார். மிடில் ஆர்டரில் புஜாரா மற்றும் ரஹானேவை தேர்வு செய்துள்ள வாசிம் ஜாபர், அடுத்ததாக சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயருக்கு இடம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சூர்யகுமார் யாதவ் தற்போது தான் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளதால் அவர் தனது வாய்ப்பிற்காக சில போட்டிகளில் காத்திருக்க வேண்டும் எனவும் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இஷாந்த் சர்மா வேண்டாம்... இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்க; முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்த வாசிம் ஜாபர் !! 4

விக்கெட் கீப்பராக விர்திமான் சஹாவை தேர்வு செய்துள்ள வாசிம் ஜாபர், ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். பந்துவீச்சாளர்கள் வரிசையில் இஷாந்த் சர்மாவிற்கு தனது அணியில் இடம் கொடுக்காத வாசிம் ஜாபர், அக்‌ஷர் பட்டேல், முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு தனது ஆடும் லெவனில் இடம் கொடுத்துள்ளார்.

வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ள ஆடும் லெவன்;

மாயன்க் அகர்வால், சுப்மன் கில், சட்டீஸ்வன் புஜாரா, அஜின்கியா ரஹானே, ஸ்ரேயஸ் ஐயர், விர்திமான் சஹா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *