கேஎல் ராகுலுக்கு போன வருஷம் இந்த பொறுப்பு இருந்துச்சு, இப்ப அதிலிருந்து ஃப்ரி ஆகிடாரு ! - ரகசியத்தை கூறிய வாசிம் ஜாபர் 1

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜாபர் கே எல் ராகுலின் பேட்டிங் குறித்து பேசியிருக்கிறார். 14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சீசனில் 8 அணிகளும் புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்து பலமாக உள்ளது.

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் மும்பையில் மோதுகிறது. 

அவர் எப்படிபட்ட வீரர் தெரியுமா ? இதெல்லாம் அவர் கிட்ட தான் கத்துக்கட்டேன் ! - ஆர்சிபி வீரர் படிக்கல் 2

இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக வீரர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பிசிசிஐ கடுமையான பயோ பப்புள் விதிமுறைகளை விதித்து இருக்கிறது. மற்றொரு பக்கம் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் அனைவரும் அனைத்து அணிகளுக்கும் உரிய ஆலோசனைகளை கூறி வருகின்றனர். 

தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜாபர் கே எல் ராகுலின் பேட்டிங் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில் “கே எல் ராகுல் இங்கிலாந்து டி20யில் மோசமான பார்மில் இருந்திருக்கிறார். ஆனால் ஒருநாள் தொடரில் தன்னை நிருபித்தார். இவர் இந்தாண்டு ஐபிஎல்லில் ஆரம்ப முதல் தனது அதிரடி வெளிப்படுத்துவார்.

இங்கிலாந்து தொடரை விடுங்க, ஐபிஎல்'ல பாருங்க இவர் எப்படி விளையாடுவார்'னு ! பேட்டிங் பயிற்சியாளர் உறுதி 3

ஏன்னென்றால், கடந்த சீசனில் எங்கள் அணியில் மிடில் ஆர்டர் பரச்சனை இருந்தது. மிடில் ஆர்டரில் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் ராகுல் களத்தில் நீண்ட நேரம் இருந்து விளையாட வேண்டியிருந்தது.

ஆனால் தற்போது நாங்கள் மிடில் ஆர்டருக்கு சிறந்த வீரர்களை தேர்வு செய்துளளோம். எனவே இவர் ஆரம்ப முதலே அதிரடி விளையாடி வருவார். மேலும் இதன் சீசனின் சிறந்த பேட்ஸ்மன் என்ற பெயரெடுப்பார்” என்று பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜாபர் கே எல் ராகுலை பாராட்டி இருக்கிறார்.

கேஎல் ராகுலுக்கு போன வருஷம் இந்த பொறுப்பு இருந்துச்சு, இப்ப அதிலிருந்து ஃப்ரி ஆகிடாரு ! - ரகசியத்தை கூறிய வாசிம் ஜாபர் 2

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *