வீடியோ; அசத்தலான கேட்ச் பிடித்து சஞ்சு சாம்சனை அலறவிட்ட அப்துல் சமத் !! 1

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன.

டெல்லி அருன் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

வீடியோ; அசத்தலான கேட்ச் பிடித்து சஞ்சு சாம்சனை அலறவிட்ட அப்துல் சமத் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஸஸ்வி ஜெய்ஸ்வாலும், ஜாஸ் பட்லரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில் ஜெய்ஸ்வால் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதனையடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜாஸ் பட்லர் – சஞ்சு சாம்சன் கூட்டணி, ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு மளமளவென ரன் குவித்தது.

வீடியோ; அசத்தலான கேட்ச் பிடித்து சஞ்சு சாம்சனை அலறவிட்ட அப்துல் சமத் !! 3

அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 48 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மறுபுறம் ருத்ரதாண்டவம் ஆடிய ஜாஸ் பட்லர் 19வது ஓவர் வரை தாக்குபிடித்து 64 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் குவித்ததன் மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 220 ரன்கள் குவித்துள்ளது.

வீடியோ; அசத்தலான கேட்ச் பிடித்து சஞ்சு சாம்சனை அலறவிட்ட அப்துல் சமத் !! 4

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் ரசீத் கான், சந்தீப் சர்மா மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், அப்துல் சமதின் அசத்தலான கேட்ச்சில் விக்கெட்டை இழந்த வீடியோ இங்கே;

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *