Cricket, Champions Trophy, India, Pakistan, Hardik Pandya, Ms Dhoni, Virat Kohli

சிறிது நாளுக்கு முன்பு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி எதிர் பாராத விதமாக முடிந்தது. அந்த தொடரில் சிறப்பாக விளையாடி, முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் வென்று, இறுதி போட்டியில் அதே பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை கண்டது. பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில் இந்திய அணிதான் வெற்றி பெறும் என அனைவரும் நினைத்தனர். ஆனால், பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி, இந்திய அணியை 180 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் சாம்பியன்ஸ் டிராபியை வென்று அசத்தியது.

அன்று பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியது, ஆனால் எதிர்பாராத விதமாக ஹர்டிக் பாண்டியா ரன் அவுட் ஆனதால், பல கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள் ஆகினர். இந்த நாள் வரைக்கும் அவர் விளையாடிய சிறந்த இன்னிங்ஸ் அது தான். அந்த மைதானத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் தடுமாறிய போது, பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்தார் ஆல்-ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சாளர்களை பிரித்து மேய்ந்தனர். இதனால், பக்கர் சமானின் அதிரடி சதத்தால் பாகிஸ்தான் அணி 338 ரன் அடித்தது. பிறகு இந்த கடினமான இலக்கை துரத்தியது இந்தியா.

ஆரம்பத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.முதல் ஓவரில் ரோகித் சர்மா வெளியேற, மூன்றாவது ஓவரில் இந்திய கேப்டன் விராட் கோலி பெவிலியன் திரும்பினார். ஷிகர் தவான் மற்றும் யுவராஜ் சிங் ஜோடி இந்திய அணியை காப்பாற்றும் என இந்திய ரசிகர்கள் நினைத்த போது, ஜோடியும் பிரிந்தது. அடுத்து வந்த தோனி, கேதார் ஜாதவ் நிலைத்து நிற்காத நிலையில், இந்திய அணி 100 ரன் கூட தொடாது என நினைத்தார்கள்.

ஆனால், அடுத்து வந்த ஹர்டிக் பாண்டியா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை ஒரு கை பார்த்தார். 6 சிக்ஸர், 4 பவுண்டரி என நான்கு திசையிலும் பந்தை பறக்கவிட்டார் ஹர்டிக் பாண்டியா. சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் வாங்கினார். இவர் தான் இந்தியாவின் கடைசி நம்பிக்கை என்று நினைக்கும் போது, பாண்டியாவை ரன்-அவுட் செய்தார் ரவீந்திர ஜடேஜா. இதனால், இந்திய அணி 158 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

தனது விக்கெட்டை பறிகொடுத்து ஹர்டிக் பாண்டியாவை விளையாட வைத்திருக்கலாம், ஆனால் ரவீந்திர ஜடேஜா செய்தது வேறு. இதனால், ரவீந்திர ஜடேஜா மீது உள்ள கோபத்தால், பிட்சை விட்டு செல்லும் போது ஜடேஜாவை திட்டி கொண்டே சென்றார் பாண்டியா. அதன் பிறகு, இணயத்தளத்தில் ரவீந்திர ஜடேஜாவின் பெயர் ‘வைரல்’ ஆகியது. தற்போது, இந்திய அறையில் ஹர்டிக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா சண்டை போடுவது போல் அனிமேட்டட் வீடியோ வந்திருக்கிறது. அந்த வீடியோவை இங்கு பாருங்கள்:

https://youtu.be/aQGj15wYcz0

விவரம் காண

ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!!

எப்பொழுது : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், ஏப்ரல் 26 இரவு 8 மணியளவில் எங்கே : இராஜீவ்காந்தி சர்வதேச மைதானம்,...

ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதல்!!! சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் கணிக்கப்பட்ட அணி!!!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்று (ஏப்ரல் 26) நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ஹைதராபாத் அணி...

ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதல்!!! கிங்க்ஸ் லெவன் பஞ்சாபின் கணிக்கப்பட்ட அணி!!!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்று (ஏப்ரல் 26) நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி...

இது வின்டேஜ் தல…. கடைசி 7 ஓவருக்கு 100 ரன் சேசிங்!! தோனி, ராயுடுவை புகழந்து தள்ளும் ட்விட்டர் உலகம்!!

பெங்களூரு: ஐபிஎல் தொடரின் 24-வது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ்...

மான்செஸ்டரில் நடக்கிறது இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போர்; முழு அட்டவணை உள்ளே !!

மான்செஸ்டரில் நடக்கிறது இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போர்; முழு அட்டவணை உள்ளே அடுத்த ஆண்டு 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் லீக்...