ஆஸ்திரேலிய மண்ணில் முதல் சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பந்த் சிட்னி டெஸ்டில் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா 193 ரன்கள் குவித்து இரட்டை சதத்தை தவறவிட்டார்.

விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 159 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார்.

அத்துடன் வெளிநாட்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் டோனியை பின்னுக்குத்தள்ளி முதல் இடம்பிடித்துள்ளார்.வீடியோ: ரிஷப் பன்ட்டிற்கென ஒரு பாட்டு பாடி ஆஸ்திரேலிய ரசிகர்களை கலாய்த்த இந்திய ரசிகர்கள்!! 1

இதற்கு முன் பரூக் இன்ஜினீயர் அடிலெய்டில் 89 ரன்கள் அடித்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. கிரண் மோரே ஆட்டமிழக்காமல் 67 ரன்களும், பார்தீவ் பட்டேல் 62 ரன்களும், எம்எஸ் டோனி ஆட்டமிழக்காமல் 57 ரன்களும் அடித்துள்ளனர்.

இதற்கு முன் எம்எஸ் டோனி பைசலாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 148 ரன்கள் அடித்ததுதான் வெளிநாட்டு மண்ணில் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் சேர்த்து முதல் இடம்பிடித்துள்ளார்.

இதுகுறித்து ரிஷப் பந்து கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியாவில் விளையாடும்போது இரண்டுமுறை 92 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டேன்.வீடியோ: ரிஷப் பன்ட்டிற்கென ஒரு பாட்டு பாடி ஆஸ்திரேலிய ரசிகர்களை கலாய்த்த இந்திய ரசிகர்கள்!! 2

இதனால் இன்றைய போட்டியில் 90-ஐ தாண்டும்போது சற்று பதற்றமாக இருந்தது. இதனால் சற்று பயமாகவும் இருந்தது. இருந்தாலும் வெற்றிகரமாக சதம் அடித்தேன். சதம் அடித்து சந்தோசத்தை வெளிப்படுத்திய என்னுடைய ஸ்டைலை நான் விரும்புகிறேன்.

நான் அதேபோல் செய்வேன் என்று நினைத்தது கிடையாது. ஆனால் சந்தோசத்தை வெளிப்படுத்தும்போது தானாக வெளியாகிறது’’ என்றார்.

அடுத்து ஜடேஜா, ரிஷாப்புடன் இணைந்தார். இருவரும் சரியான பந்துகளை தேர்ந்தெடுத்து அடித்து ஆடினர். சிறப்பாக விளையாடிய ரிஷாப் பன்ட் அபார சதம் அடித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை செய்திருக்கிறார் ரிஷாப். இது அவருக்கு இரண்டாது டெஸ்ட் சதம். இதற்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் சதம் அடித்திருந்தார்.

அவருக்கு துணையாக நின்ற ஜடேஜா அரைசதம் அடித்தார். அவர் 81 ரன் எடுத்திருந்த நிலையில் லியான் பந்துவீச்சில் போல்டானார். இதை யடுத்து கேப்டன் விராத் கோலி, டிக்ளேர் செய்தார். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன் எடுத்துள்ளது. ரிஷாப் ஆட்டமிழக்காமல் 159 ரன் எடுத்திருந்தார்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. ஹாரிஸூம் கவாஜாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர். • SHARE

  விவரம் காண

  சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு !!

  சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின்...

  இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் !!

  இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் உலகத்தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக பந்து வீச்சில்...

  இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி !!

  இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி பாகிஸ்தானில் இந்த ஆண்டு செப்டம்பரில் நடக்கும் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி...

  அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு !!

  அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நாளை நடைபெற உள்ளது. விராட்கோலி...

  இந்திய அணியின் வெற்றி பயணம் தொடருமா..? நாளை இரண்டாவது டி.20 போட்டி !!

  விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டி தொடரில்...