புஜாராவை நடுவர் அவுட் இல்லை என்று கூறினார் இதனால் இலங்கை கேப்டன் தினேஷ் சந்திமால் DRS முடிவு எடுத்தார் இதன் படி புஜாரா அவுட் என நடுவர் கூறினார்.

புஜாரா அவுட் ஆன விடியோவை பாருங்கள் :

https://twitter.com/Cricvids1/status/893347015005945856

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள் எடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று தொடங்கிய இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது. சேதேஷ்வர் புஜாரா 225 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 128, அஜிங்க்ய ரஹானே 168 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்கள். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 211 ரன்கள் குவித்தது.

இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கியவுடன் 133 ரன்களில் கருணாரத்னே பந்துவீச்சில் வெளியேறினார் புஜாரா. 4-வது விக்கெட்டுக்கு புஜாரா – ரஹானே ஜோடி 217 ரன்கள் குவித்தது. இதன்பிறகு அஸ்வின் களமிறங்கி வழக்கம்போல தன்னுடைய பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்.

இந்திய அணி 106 ஓவர்களில் 400 ரன்களை எட்டியது. 6-வது களமிறங்கியுள்ள அஸ்வின், அணியில் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து விளையாடி இலங்கை அணிக்கு மேலும் நெருக்கடி அளித்தார்.

இதனிடையே இன்னும் நிறைய ரன்கள் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே, புஷ்பகுமாரா பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆகி 132 ரன்களில் வீழ்ந்தார். ரஹானே – அஸ்வின் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது. இதன்பிறகு வந்த சாஹா, வழக்கம்போல கவனமாக விளையாடித் தாக்குப்பிடித்தார்.

2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 120 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் 47, சாஹா 16 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *