வீடியோ; இந்த விசயத்துல நம்மள அடிச்சிக்க முடியுமா..? மிரட்டலான கேட்ச்சால் கெய்லை வெளியேற்றிய ஜடேஜா !! 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி வெறும் 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

14வது ஐபிஎல் சீசசின் 8வது போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

வீடியோ; இந்த விசயத்துல நம்மள அடிச்சிக்க முடியுமா..? மிரட்டலான கேட்ச்சால் கெய்லை வெளியேற்றிய ஜடேஜா !! 2

இன்றைய போட்டிக்கான இரு அணிகளும் எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான இரு அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன கிரிஸ் கெய்ல்,கே.எல் ராகுல், நிக்கோலஸ் பூரன் போன்ற பல வீரர்கள் இடம்பெற்றிருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறியது.

வீடியோ; இந்த விசயத்துல நம்மள அடிச்சிக்க முடியுமா..? மிரட்டலான கேட்ச்சால் கெய்லை வெளியேற்றிய ஜடேஜா !! 3

பஞ்சாப் அணியின் துவக்க வீரரான மாயன்க் அகர்வாலை, சென்னை அணியின் துவக்க வீரரான தீபக் சாஹர் போட்டியின் முதல் ஓவரின் 4வது பந்திலேயே போல்டாக்கி வெளியேற்றினார்.

இதனையடுத்து மற்றொரு துவக்க வீரரான கே.எல் ராகுலை, உலகின் நம்பர் 1 பீல்டரான ரவீந்திர ஜடேஜாவின் துல்லியமான த்ரோவால் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அடுத்தடுத்து களமிறங்கிய கிரிஸ் கெய்ல் (10), தீபக் ஹூடா (10) மற்றும் நிக்கோலஸ் பூரண் (0) ஆகியோர் தீபக் சாஹரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். இதன் பின் வந்த தமிழக வீரர் ஷாருக் கான் மட்டும் நீண்ட நேரம் தாக்குபிடித்து 36 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து வந்த வீரர்களும் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்துள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி வெறும் 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

வீடியோ; இந்த விசயத்துல நம்மள அடிச்சிக்க முடியுமா..? மிரட்டலான கேட்ச்சால் கெய்லை வெளியேற்றிய ஜடேஜா !! 4

பவர்ப்ளே ஓவர்களில் பஞ்சாப் அணியை படாதபாடு படுத்திய தீபக் சாஹர் 4 ஓவர்கள் வீசி அதில் வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுகொத்து 4 முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அதே போல் சாம் கர்ரான், மொய்ன் அலி மற்றும் பிராவோ தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

 

 

 

ஜடேஜாவின் அசாத்திய கேட்ச்சால் கிரிஸ் கெய்ல் விக்கெட்டை பறிகொடுத்த வீடியோ இங்கே;

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *