ஒரே திசையில் ரன் ஓடி அசிங்கப்பட்ட பஞ்சாப் வீரர்கள்; சிரிப்பாய் சிரிக்கும் ரசிகர்கள் !! 1

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வீரர் தீபக் ஹூடா விக்கெட்டை பறிகொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன.

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஒரே திசையில் ரன் ஓடி அசிங்கப்பட்ட பஞ்சாப் வீரர்கள்; சிரிப்பாய் சிரிக்கும் ரசிகர்கள் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாயன்க் அகர்வாலும், பிரப்சிம்ரன் சிங்கும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில் பிரப்சிம்ரன் சிங் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். அடுத்ததாக களமிறங்கிய கெய்ல் 13 ரன்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மாலன் 26 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களை கூட தாண்டாமல் விக்கெட்டை இழந்தாலும், மறுபுறம் இறுதி வரை ஆட்டமிழக்காமல் மிக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணியின் கேப்டன் மாயன்க் அகர்வால் 58 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் குவித்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 166 ரன்கள் குவித்துள்ளது.

ஒரே திசையில் ரன் ஓடி அசிங்கப்பட்ட பஞ்சாப் வீரர்கள்; சிரிப்பாய் சிரிக்கும் ரசிகர்கள் !! 3

டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் ஆவேஸ் கான் மற்றும் அக்‌ஷர் பட்டேல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

ஒரே திசையில் ரன் ஓடி அசிங்கப்பட்ட பஞ்சாப் வீரர்கள்; சிரிப்பாய் சிரிக்கும் ரசிகர்கள் !! 4

இந்தநிலையில், இந்த போட்டியில் பஞ்சாப் வீரரான தீபக் ஹூடா மற்றும் மாயன்க் அகர்வால் ஆகியோர் ஓரே திசையில் ரன் ஓடி அதில் தீபக் ஹூடா பரிதாபமாக விக்கெட்டை பறிகொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரே திசையில் உசுரை கொடுத்து ரன் ஓடிய தீபக் ஹூடா மற்றும் மாயன்க் அகர்வாலை நெட்டிசன்கள் கிண்டலடித்தும் வருகின்றனர்.

வீடியோ இங்கே;

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *