35 நாட்களுக்குப் பிறகு மீண்டும் களத்தில் : தோனி பந்து வீசி பயிற்சி எடுக்கும் வீடியோ 1

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் நாளை நடைபெறுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்தபின், 3 ஒரு நாள் போட்டிகளில் அடுத்து விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நாளை நடக்கிறது. 35 நாட்களுக்குப் பிறகு மீண்டும் களத்தில் : தோனி பந்து வீசி பயிற்சி எடுக்கும் வீடியோ 2இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களம் காண்கிறது. புவனேஷ்வர்குமார், சித்தார்த் கவுல், சாஹேல், அக்‌ஷர் படேல், ஹர்திக், பும்ரா உள்ளிட்ட இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பயிற்சியில் 35 நாட்களுக்கு பிறகு மீண்டும் மைதானத்திற்கு வந்து பயிற்சி செய்தார். தோனி பயிற்சி செய்வதை பார்க்கவே பல ரசிகர்கள் காத்திருந்து பார்த்தனர். முன்னர் ஒரு முறை லெக் ப்ரேக் பந்து பயிற்சியில் வீசியது போல தற்போது தனது மீடியம் பேஸ் பந்துவீச்சு வீசி தன்னை டெஸ்ட் செய்து கொண்டார்.

அந்த வீடியோ கீழே :

தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்தியா, இலங்கை அணி வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். டெஸ்ட் தொடரைப் போன்று ஒருநாள் தொடரிலும் வெற்றி பெற்றால் இந்திய அணி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிவிடும்.

வீராட்கோலி இல்லாததால் ரோகித்சர்மா அணியின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். கோலி இல்லாத இந்திய அணி அதே உத்வேகத்துடன் விளையாடி இலங்கையை வீழ்த்துமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து ஒருநாள் தொடரை இழந்தது இல்லை. தொடர்ச்சியாக 7 ஒருநாள் தொடரை கைப்பற்றி இருந்தது.35 நாட்களுக்குப் பிறகு மீண்டும் களத்தில் : தோனி பந்து வீசி பயிற்சி எடுக்கும் வீடியோ 3

ஜிம்பாப்வே (3-0), நியூசிலாந்து (3-2), இங்கிலாந்து (2-1), வெஸ்ட் இண்டீஸ் (3-1), இலங்கை (5-0), ஆஸ்திரேலியா (4-1), நியூசிலாந்து (2-1) ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது.

ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய 3 அணிகளை மட்டும் அந்நாட்டு மண்ணில் வீழ்த்தி இருந்தது. மீதியுள்ள 4 ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் வென்றது.35 நாட்களுக்குப் பிறகு மீண்டும் களத்தில் : தோனி பந்து வீசி பயிற்சி எடுக்கும் வீடியோ 4

இந்திய அணி தற்போது இலங்கையை வீழ்த்தி தொடர்ச்சியாக 8-வது ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது.

டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையில் இருக்கிறது. மேலும் சொந்த மண்ணில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒயிட்வாஷ் (0-5) ஆகி இருந்ததால் அதற்கு பழிதீர்க்கும் ஆர்வத்துடனும் திகழ்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *