வீடியோ; க்ரூணல் பாண்டியாவிடம் மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக் !! 1

வீடியோ; க்ரூணல் பாண்டியாவிடம் மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்

இந்தியா – நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்க ஜோடியான முன்ரோ – சேஃபெர்ட்டின் அதிரடியான தொடக்கம் மற்றும் கோலின் டி கிராண்ட்ஹோமின் அதிரடி ஆகியவற்றின் விளைவாக 212 ரன்களை குவித்தது.

213 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு களத்திற்கு வந்த விஜய் சங்கர், அதிரடியாக ஆடினார். பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர், அதேநேரத்தில் அடித்து ஆடவும் தவறவில்லை. 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 43 ரன்களை குவித்து சாண்ட்னெரின் பந்தில் ஆட்டமிழந்தார்.

வீடியோ; க்ரூணல் பாண்டியாவிடம் மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக் !! 2

பின்னர் வந்த ரிஷப் பண்ட் வந்த வேகத்தில் சிக்ஸர் பவுண்டரிகளுமாக விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார். 12 பந்தில் 28 ரன் விளாசிய நிலையில் பண்ட்  ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 38, பாண்டியா 21, தோனி 2 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி தடுமாறியது.

பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்-க்ருனால் பாண்டியா ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல கடைசிவரை போராடினர். இருப்பினும் இந்தியாவால் 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

https://twitter.com/premchoprafan/status/1094544388515135489

கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியின் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் களத்தில் நின்றிருந்த தினேஷ் கார்த்திக், ஐந்தாவது பந்தை பவுண்டரி அடிக்க முயன்றார் ஆனால் அது பவுண்டரி செல்லாததால் எதிர்முனையில் நின்றிருந்த க்ரூணல் பாண்டியா ரன் எடுக்க ஓடிவந்தார் ஆனால் ரன் ஓடாமால் அதே இடத்தில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து வைத்தார். இதனையடுத்து போட்டி நிறைவடைந்த பிறகு ரன் ஓடி வராததற்கு க்ரூணல் பாண்டியாவிடம் தினேஷ் கார்த்திக் மன்னிப்பு கேட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *