நான் பயந்தேனா..? கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த இயான் மோர்கன்

ஸ்டார்க்கின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயான் மோர்கன் அச்சப்பட்டதாக கூறிய கெவின் பீட்டர்சனுக்கு இயான் மோர்கனே பதிலடி கொடுத்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இங்கிலாந்து அணியும் மோதின.

கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளாக பார்க்கப்பட்டு வரும் இரு அணிகள் இடையேயான இந்த கிரிக்கெட் போர், இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் 53 ரன்களும், ஆரோன் பின்ச் 100 ரன்களும் எடுத்து மிகச்சிறப்பான துவக்கம் கொடுத்தாலும், அடுத்தடுத்து வந்த வீரர்களில் ஸ்டீவ் ஸ்மித் (38) மற்றும் அலெக்ஸ் கேரி (38*) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாததால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 285 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்து அணியால் இந்த இலக்கை மிக இலகுவாக எட்ட முடியும் என்பதே ஒட்டுமொத்த கிரிக்கெட் விமர்ச்சகர்களின் கருத்தாக பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான வின்ஸ் டக் அவுட்டாகி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கணிப்பையும் தவிடுபொடியாக்கினார்.

அடுத்தடுத்த களமிறங்கிய வீரர்களில் ஸ்டோக்ஸை (89) மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வந்த வேகத்தில் வெளியேறியதால் 44.4 ஓவர்களில் வெறும் 220 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 64 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இங்கிலாந்து அணியுடனான இந்த அசத்தல் வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் இடையேயான இந்த போட்டி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன், போட்டியின் போது இயான் மோர்கன் பயந்துவிட்டார் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது கெவின் பீட்டர்சன் கூறியதற்கு இயான் மோர்கனே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பதிலடி கொடுத்துள்ளார். • SHARE

  விவரம் காண

  இவர்தான் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் – கசிந்த தகவல்

  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு யார் வரப்போகிறார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்தியன் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ரவிசாஸ்திரியின்...

  தோனியை கிண்டலடிக்க உனக்கு என்ன தகுதி? இங்கிலாந்து வீரரை விளாசிய ரசிகர்கள்!!

  தோனியின் இராணுவ முடிவு குறித்து கிண்டலடித்த இங்கிலாந்து முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளர்கள் டேவிட் லாய்டை ட்விட்டரில் பொரிந்து தள்ளியுள்ளனர் ரசிகர்கள். உலகக் கோப்பை...

  இவரெல்லாம் ராணுவத்துக்கு போறாரா? தோனியை கிண்டலாகப் பேசிய இங்கிலாந்து வீரர்!!

  இவரெல்லாம் ராணுவத்துக்கு போறாரா? என்ற வண்ணம் தோனியை கிண்டலடித்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளர் டேவிட் லாய்டு. உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு...

  சத்தியமா அதுக்கு கே.எல் ராகுல் தான் காரணம்; உண்மையை உடைத்த தேர்வுக்குழு தலைவர் !!

  சத்தியமா அதுக்கு கே.எல் ராகுல் தான் காரணம்; உண்மையை உடைத்த தேர்வுக்குழு தலைவர் கே.எல் ராகுல் கேட்டு கொண்டதற்காகவே உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய...

  சுப்மன் கில்லிற்கு ஏன் இடம் இல்லை..? புதிய விளக்கம் கொடுக்கும் எம்.எஸ். கே பிரசாத் !!

  சுப்மன் கில்லிற்கு ஏன் இடம் இல்லை..? புதிய விளக்கம் கொடுக்கும் எம்.எஸ். கே பிரசாத் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3...