வீடியோ; கடைசி மூன்று பந்தில் மூன்று சிக்ஸர்... ஆஸ்திரேலிய அணியை கதி கலங்க வைத்த ஹர்திக் பாண்டியா !! 1

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

வீடியோ; கடைசி மூன்று பந்தில் மூன்று சிக்ஸர்... ஆஸ்திரேலிய அணியை கதி கலங்க வைத்த ஹர்திக் பாண்டியா !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 11 ரன்களிலும், மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய கோலி 2 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.

இதன்பின் களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ், கே.எல் ராகுலுடன் கூட்டணி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தேவைக்கு ஏற்ப சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து அசத்திய கே.எல் ராகுல் 32 பந்துகளில் அரைசதம் அடித்துவிட்டு 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.

வீடியோ; கடைசி மூன்று பந்தில் மூன்று சிக்ஸர்... ஆஸ்திரேலிய அணியை கதி கலங்க வைத்த ஹர்திக் பாண்டியா !! 3

இதன்பின் களத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு மளமளவென ரன் குவித்தார். 25 பந்துகளில் அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா, இறுதி வரை ஆட்டமிழக்காமல் கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் சிக்ஸர்கள் விளாசி 30 பந்துகளில் 71 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 208 ரன்கள் குவித்துள்ளது.

வீடியோ; கடைசி மூன்று பந்தில் மூன்று சிக்ஸர்... ஆஸ்திரேலிய அணியை கதி கலங்க வைத்த ஹர்திக் பாண்டியா !! 4

ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகளையும், ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்தில் ஹர்திக் பாண்டியா சிக்ஸர் விளாசிய வீடியோ;

Leave a comment

Your email address will not be published.