வீடியோ: வெற்றியின் விளிம்பில் இருந்து 1 ரன்னில் தோற்ற இங்கிலாந்து! ஹைலட்ஸ் வீடியோ! 1

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் கிழக்கு லண்டனில் நேற்று நடந்தது.

முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்தது.

தொடக்க வீரர் பவுமா 27 பந்தில் 43 ரன்னும் (5 பவுண்டரி), கேப்டன் குயின்டன் டி காக் 15 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), வான்டர் டூசன் 26 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), எடுத்தனர். ஜோர்டன் 2 விக்கெட்டும், மொய்ன் அலி, சாம் கரண், மார்க்வுட், ஆதில் ரஷீத், பென்ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.வீடியோ: வெற்றியின் விளிம்பில் இருந்து 1 ரன்னில் தோற்ற இங்கிலாந்து! ஹைலட்ஸ் வீடியோ! 2

178 ரன் இலக்குடன் இங்கிலாந்து அணி பின்னர் களம் இறங்கியது.

அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 1 ரன்னில் வெற்றிபெற்றது.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட் இருந்தது. நிகிடி வீசிய முதல் பந்தில் சாம் கரண் 2 ரன் எடுத்தார். 2-வது பந்தில் அவர் அவுட் ஆனார். 3-வது பந்தில் மொய்ன் அலி ரன் எடுக்கவில்லை.4-வது பந்தில் 2 ரன் எடுத்தார்.

இதனால் கடைசி 2 பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தில் மொய்ன் அலி ஆட்டம் இழந்தார். கடைசி பந்தில் ஆதில் ரஷீத் 1 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். இதனால் 1 ரன்னில் இங்கிலாந்து தோல்வியை தழுவியது.

தொடக்க வீரர் ஜேசன்ராய் 38 பந்தில் 70 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரியும், 3 சிக்சரும் அடங்கும். கேப்டன் மார்கன் 34 பந்தில் 52 ரன் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.

வீடியோ: வெற்றியின் விளிம்பில் இருந்து 1 ரன்னில் தோற்ற இங்கிலாந்து! ஹைலட்ஸ் வீடியோ! 3
EAST LONDON, SOUTH AFRICA – FEBRUARY 12: Lungi Ngidi and Dwaine Pretorius of South Africa celebrate dismissing Ben Stokes of England during the First T20 International match between South Africa and England at Buffalo Park on February 12, 2020 in East London, South Africa. (Photo by Dan Mullan/Getty Images)

மார்கன் 19-வது ஓவரில் 2 பவுண்டரி 1 சிக்சர் அடித்தார். ஹென்ட்ரிக்ஸ் வீசிய அந்த ஓவரில் மொத்தம் 16 ரன் எடுக்கப்பட்டது. அப்படி இருந்தும் கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றியை கோட்டை விட்டது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டும், ஹென்ட்ரிக்ஸ், பெகுலு வாயோ தலா 2 விக்கெட்டும், ஸ்டெய்ன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி டர்பனில் நாளை நடக்கிறது.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *