வீடியோ; 4 பந்துகளில் 4 விக்கெட்... நெதர்லாந்து அணியை நிலைகுலைய செய்த அயர்லாந்து வீரர் !! 1

டி.20 உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அயர்லாந்து அணியின் குர்டிஸ் காம்பர் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியான இன்றைய போட்டியில் அயர்லாந்து அணியும் நெதர்லாந்து அணியும் மோதி வருகின்றன.

அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

வீடியோ; 4 பந்துகளில் 4 விக்கெட்... நெதர்லாந்து அணியை நிலைகுலைய செய்த அயர்லாந்து வீரர் !! 2

டாஸ் வென்று முதலில் கெத்தாக பேட்டிங்கை தேர்வு செய்த நெதர்லாந்து அணிக்கு பேட்டிங்கில் மிகப்பெரும் ஏமாற்றமே கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரரான பென் கூப்பர் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார்.

வீடியோ; 4 பந்துகளில் 4 விக்கெட்... நெதர்லாந்து அணியை நிலைகுலைய செய்த அயர்லாந்து வீரர் !! 3

மற்றொரு துவக்க வீரரான மேக்ஸ் 51 ரன்கள் எடுத்து கொடுத்த போதிலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் அயர்லாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதில் குறிப்பாக போட்டியின் 10வது ஓவரை வீசிய குர்டிஸ் சாம்பர் என்னும் அயர்லாந்து வீரர் அந்த ஓவரின் கடைசி நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி நெதர்லாந்து அணியை நிலைகுலைய செய்தார்.

வீடியோ; 4 பந்துகளில் 4 விக்கெட்... நெதர்லாந்து அணியை நிலைகுலைய செய்த அயர்லாந்து வீரர் !! 4

கடைசி நேரத்தில் நெதர்லாந்து அணியின் கேப்டனான சீலர் 21 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ள நெதர்லாந்து அணி வெறும் 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

அயர்லாந்து அணி சார்பில் அதிகபட்சமாக குர்டிஸ் காம்பர் 4 விக்கெட்டுகளையும், மார்க் அடைர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அயர்லாந்து அணியின் குர்டிஸ் காம்பர் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய வீடியோ இங்கே;

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *