India's Jasprit Bumrah, second right, takes a catch to dismiss West Indies Kieron Pollard, left, during the second Twenty20 international cricket match between India and West Indies at Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium in Lucknow, India, Tuesday, Nov. 6, 2018. (AP Photo/Altaf Qadri)

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா, ரோகித் சர்மாவின் அபாரமான சதத்தால் 2 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

இந்த வெற்றியின் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற டி 20 போட்டியில் தொடர்ந்து ஏழு தொடர்களில் இந்தியா வெற்றி பெற்று அசத்தி வருகிறது.

நியூசிலாந்துடனான தொடரை 2-1 என்ற கணக்கிலும், இலங்கையுடனான தொடரை 3-0 என்ற கணக்கிலும், இலங்கையில் நடைபெற்ற நிதாஹாஸ் டிராபியையும், அயர்லாந்துடனான தொடரை 2-0 என்ற கணக்கிலும், இங்கிலாந்துடனான தொடரை 2-1 என்ற கணக்கிலும், வெஸ்ட் இண்டீசுடனான தொடரை 2-0 எனவும் கைப்பற்றி அசத்தியுள்ளது

43 ரன்களில் ஒருமாதிரியான தடுமாற்றமான இன்னிங்சில் தவண் வெளியேறினார். ரிஷப் பந்த் 5 ரன்களில் மிட்விக்கெட் பவுண்டரியில் கேட்ச் ஆகி பியரிடம் வெளியேறினார். இந்த 2 விக்கெட்டுகளுக்குப் பிறகு ரோஹித் ராஜ்ஜியம்தான், ராகுல் இறங்கி 2 பவுண்டரிகளுடன் தொடங்கினார். பிறகு பியர் ஓவரில் ரோஹித் சர்மா மீண்டும் நேராக ஒரு சிக்ஸ் பிறகு ஒருகையில் ஒரு பவுண்டரி என்று திகைக்க வைக்கும் பேட்டிங்கை ஆடினார். ராகுலுக்கும் ஒரு கேட்சை பொலார்ட் லாங் ஆனில் விட்டார்.

20வது ஓவரில் பிராத்வெய்ட் பந்தில் ஒரு எட்ஜ் பவுண்டரி அடித்த ரோஹித் சர்மா, ஸ்கூப் ஷாட்டில் லாங் லெக் திசையில் மற்றுமொரு பவுண்டரி அடித்து 4வது டி20 சதமெடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை 58 பந்துகளில் நிகழ்த்தினார். சதத்தைக் கொண்டாட பிராத்வெய்ட்டை மீண்டும் லாங் ஆனில் ஒரு சிக்ஸ் தூக்கினார் ரோஹித்.

கடைசியில் 61 பந்துகளில் 111 நாட் அவுட், ராகுல் 14 பந்துகளில் 26 நாட் அவுட். இந்திய அணி 195/2. மே.இ.தீவுகள் தரப்பில் ஒஷேன் தாமஸ் சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதிகபட்சமாக பிராத்வெய்ட் 4 ஓவர்களில் 56 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

மே.இ.தீவுகள் சரிவு:

இலக்கை விரட்டக் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி துல்லியமான கலீல் அகமெட் பந்து வீச்சை அடிக்கப் போய் ஹோப், ஹெட்மையரை இழக்க பவர் பிளேயிலேயே 39/2 என்று ஆனது.

பிறகு மே.இ.தீவுகளுக்கு ஒருநாளும் புரியாத குல்தீப் வந்தார், ஒரே ஓவரில் டேரன் பிராவோ, நிகோலச் பூரன் ஆகியோரை காலி செய்தார். பிராவோவுக்கு ஒரு பிரமாதமான ஸ்லிப் கேட்சையும் எடுத்தார் ரோஹித் சர்மா. கெய்ரன் பொலார்டை ஷார்ட் பிட்ச் பந்தில் பும்ரா வீட்டுக்கு அனுப்பினார். 68/5 என்று ஆன மே.இ.தீவுகள் மெதுவே மடிந்தது.

20 ஓவர்களில் 124/9 என்று தோல்வி தழுவி தொடரை இழந்தது. ஆட்ட நாயகன் ரோஹித் சர்மா

 



  • SHARE
    Cricket Fan - Dhoni Lover - CSK Forever

    விவரம் காண

    ஐ.பி.எல் 2019; விலைபோக வாய்ப்பில்லாத ஐந்து முக்கிய வீரர்கள் !!

    ஐ.பி.எல் 2019; விலைபோக வாய்ப்பில்லாத ஐந்து முக்கிய வீரர்கள் கடந்த 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து...

    2019ம் ஆண்டு உலகக்கோப்பையை தென் ஆப்ரிக்கா வெல்லும்; டிவில்லியர்ஸ் நம்பிக்கை !!

    2019ம் ஆண்டு உலகக்கோப்பையை தென் ஆப்ரிக்கா வெல்லும்; டிவில்லியர்ஸ் நம்பிக்கை அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை தென் ஆப்ரிக்கா அணி...

    ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க காத்திற்கும் 5 வீரர்கள்!

    ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க காத்திற்கும் 5 வீரர்கள்! 2019-ம் ஆண்டு நடைபெறும் 12-வது சீசன் ஐபிஎல் போட்டிக்காக ராஜஸ்தான் அணி பல்வேறு மாற்றங்களைச்...

    ஆஸ்திரேலியா தொடரில் பும்ராஹ் மாஸ் காட்டுவார்; முன்னாள் வீரர் ஆரூடம் !!

    ஆஸ்திரேலியா தொடரில் பும்ராஹ் மாஸ் காட்டுவார்; முன்னாள் வீரர் ஆரூடம் ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய பந்துவீச்சாளர் பும்ராஹ் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும்...

    என்னை தக்க வைத்ததன் மூலம் ஆச்சரியம் அடைந்தேன்: கமலேஷ் நாகர்கோட்டி

    2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு தயாராகி வரும் அணிகள், தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டும், மற்றவர்களை விடுவித்தும் வருகின்றன. அதன் பட்டியல்...