முதல் ஒருநாள் போட்டியில் வீசிய தனது முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் விக்கெட்டை, ஸ்டம்ப்பை தெறிக்கவிட்டு தூக்கியுள்ளார் முகமது சிராஜ். அந்த வீடியோவை கீழே பார்ப்போம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். டேவிட் வார்னர் முதல் ஒருநாள் போட்டியில் இடம் பெறவில்லை. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு டிராவிஸ் ஹெட் மற்றும் மிச்சல் மார்ஸ் ஓப்பனிங் செய்தனர். இந்திய அணிக்கு வேகப்பந்துவீச்சு ஜோடி முகமது சிராஜ் மற்றும் முகமது சமி இருவரும் தங்களது தாக்குதலை தொடங்கினர்.
முதல் ஓவரை வீசிய முகமது சமி, ஆஸ்திரேலியா துவக்க வீரர்களை திணறடித்தார். துரதிஷ்டவசமாக சில வாய்ப்புகள் கிடைத்தும் விக்கெட் விழவில்லை. அதற்கு அடுத்த ஓவரிலேயே முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி டிராவிஸ் விக்கெட்டை போல்டாக்கி எடுத்தார்.
பவர் பிளே ஓவர்களில் முகமது சிராஜ் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீீீீழ்த்தி நம்பிக்கை கொடுத்து வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் அபாரமாக செயல்பட்டு வருவதால் ஒருநாள் தொடரின் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இவர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
டிராவிஸ் ஹெட், 5 ரன்களுக்கு ஆட்டம் இழந்து நடையை கட்டினார். அதன்பிறகு ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிச்சல் மார்ஷ் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்தது. ஸ்டீவ் ஸ்மித் 30 பந்துகளில் 22 ரன்கள் அடித்திருந்தபோது ஹர்திக் பாண்டியாவிடம் ஆட்டம் இழந்து வெளியேறினார். தற்போதுவரை 15 ஓவர்கள் முடிவில் அணி 91 ரன்கள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி
முகமது சிராஜ் பந்தில் டிராவிஸ் ஹெட் போல்டாகி ஆட்டமிழந்த வீடியோ:
The No.1 Ranked ODI bowler – Mohammad Siraj. What a rise for Siraj! pic.twitter.com/qejZoXEvaH
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 17, 2023