அபார கேட்ச் மூலம் பாண்டியாவை பேக் அப் பண்ணிய மார்கம் !! வீடியோ 1
அபார கேட்ச் மூலம் பாண்டியாவை பேக் அப் பண்ணிய மார்கம் !! வீடியோ

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை, தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் மார்க்அம் அபார கேட்ச் மூலம் வெளியேற்றினார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடனான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற இழந்த நிலையில், தற்போது இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் மூன்று போட்டிகளிலும், ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்திய இந்திய அணி, தொடரிலும் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி ஜோஹன்ஸ்பெர்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

அபார கேட்ச் மூலம் பாண்டியாவை பேக் அப் பண்ணிய மார்கம் !! வீடியோ 2

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, 5 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கோஹ்லி – தவான் கூட்டணி, தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன் குவித்தது.

கோஹ்லி 75 ரன்னிலும், தவான் 109 ரன்னிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர். அடுத்து வந்த ராஹானே 8 ரன்னிலும், ஸ்ரேயஸ் ஐயர் 18 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அபார கேட்ச் மூலம் பாண்டியாவை பேக் அப் பண்ணிய மார்கம் !! வீடியோ 3

பின்னர் வந்த இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, 9 ரன்கள் எடுத்திருந்த போட்டியின் 47 ஓவரின் ஒரு பந்தை பாண்டியா ஹாப் சைடில் அடிக்க முயற்சித்தார், ஆனால் அதனை தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் மார்கம் காற்றில் பறந்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்தினார்.

வீடியோ;

https://twitter.com/AlauddinKhilj10/status/962349197193134081

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *