விராட் கோலியின் விக்கெட்டை எடுத்துவிட்டு சிரித்த மிட்செல் ஸ்டார்க்!! 1

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் அடிலெய்டுவில் நடந்த போட்டியில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் எம்.சி.ஜி. மைதானத்தில் நேற்று தொடங்கியது. அகர்வால் இந்த டெஸ்டில் அறிமுகம் ஆனார்.

‘டாஸ்’ வென்று முதலில் விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து இருந்தது. தனது முதல் டெஸ்டிலேயே தொடக்க வீரரான அகர்வால் முத்திரை பதித்தார். அவர் 76 ரன்கள் எடுத்தார். புஜாரா 68 ரன்னும், வீராட்கோலி 47 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. புஜாராவும் கோலியும் தொடர்ந்து விளையாடினார்கள்.இருவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை தொடர்ந்து நம்பிக்கையுடன் எதிர் கொண்டு சிறப்பாக விளையாடினார்கள். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கோலி அரை சதத்தை தொட்டார். 110 பந்துகளில் 6 பவுண்டரியுடன் அவர் 50 ரன்னை எடுத்தார். 105. 3-வது ஓவரில் இந்திய அணி 250 ரன்னை தொட்டது.விராட் கோலியின் விக்கெட்டை எடுத்துவிட்டு சிரித்த மிட்செல் ஸ்டார்க்!! 2

மறுமுனையில் இருந்த புஜாரா மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 280 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். இந்த டெஸ்ட் தொடரில் இவருக்கு 2-வது செஞ்சூரியாகும். அடிலெய்டு டெஸ்டில் 123 ரன்கள் குவித்து இருந்தார்.67-வது டெஸ்டில் விளையாடும் புஜாராவுக்கு இது 17-வது சதமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4-வது செஞ்சூரியை பதிவு செய்தார்.

மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 103 ரன்னும், கோலி 69 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் வீராட்கோலி ஆட்டம் இழந்தார். சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அவர் 82 ரன்னில் வெளியேறினார். 204 பந்துகளில் 9 பவுண்டரியுடன் கோலி இந்த ரன்னை எடுத்தார். அவரது விக்கெட்டை ஸ்டார்க் கைப்பற்றினார்.

கோலி ஆட்டம் இழந்த போது இந்தியாவின் ஸ்கோர் 293 ரன்னாக இருந்தது. அவரும், புஜாராவும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 170 ரன் எடுத்தனர்.அடுத்து ரகானே களம் வந்தார். கோலி ஆட்டம் இழந்த சிறிது நேரத்தில் புஜாராவும் வெளியேறினார். அவர் 319 பந்தில் 10 பவுண்டரியுடன் 106 ரன்கள் எடுத்தார். கும்மின்ஸ் அவரை ‘அவுட்’ செய்தார்.5-வது விக்கெட்டுக்கு ரகானேயுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். 126.3-வது ஓவரில் இந்திய அணி 300 ரன்னை தொட்டது.தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 346 ரன் எடுத்து இருந்தது. ரகானே 30 ரன்னிலும், ரோகித்சர்மா 13 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.விராட் கோலியின் விக்கெட்டை எடுத்துவிட்டு சிரித்த மிட்செல் ஸ்டார்க்!! 3

தேனீர் இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரகானே 34 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து ரிசப்பண்ட் களம் வந்தார். 161.5-வது ஓவரில் இந்தியா 400 ரன்னை தொட்டது. ரோகித்சர்மா 97 பந்தில் 4 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார்.ரிசப்பண்ட் 39 ரன்னும், ஜடேஜா 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.இந்திய அணி 169.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 437 ரன் குவித்த நிலையில் ‘டிக்ளேர்’ செய்தது. கும்மினஸ் 3 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆடியது. ஆரோன் பிஞ்சும், ஹாரிசும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.ஹாரிஸ் 5 ரன்களும், பிஞ்சு 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்ததுவ்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *