JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

தோனியின் மனைவி ஷாக்‌ஷி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 நிமிடங்கள் கொண்ட ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஊரடங்கு காலங்களில் தோனியின் மனைவி ஷாக்‌ஷி, அவரது சமூக வலைதளங்களில் தோனி குறித்தும், அவர் ஊரடங்கில் என்ன செய்கிறார் என்பது குறித்தும் பல விஷயங்களை வீடியோ வாயிலாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது 10 நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளர். அதில் மகள் ஷிவா உடன் உரையாடும் அவர் வானத்தில் தெரியும் மேகக்கூட்டங்கள் பற்றியும், மழை எப்படி வருகிறது என்பது பற்றியும் விளக்குகிறார்.

மேலும் ஷிவாவிடம் “நீ சிறு வயதில் இடிக்கும் மின்னலுக்கும் மிகப் பயப்படுவாய்” எனக் கூற ஷிவா, நான் எப்போதும் அதற்கு பயப்படமாட்டேன் எனக் கூறுகிறார். இறுதியாக தோனி வழக்கம்போல தனது மகளுடன் பைக்கில் ரைடு வருகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுடன் கலந்துரையாடினார். அப்போது கேப்டன்ஷிப் எப்படி கிடைத்தது என்ற கேள்விக்கு கோலி பதில் அளித்து கூறியதாவது:-

இந்திய அணிக்குள் நுழைந்ததில் இருந்தே கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினேன். எல்லா போட்டிகளிலும் ஆடும் லெவன் அணியில் இடம் பெற வேண்டும் என்று விரும்பினேன்.

டோனியின் கேப்டன்ஷிப்பில் விளையாடிய போது அவருடன் நெருக்கமாக செயல்பட்டேன். அதாவது அவர் விக்கெட் கீப்பர், முதலாவது ஸ்லிப்பில் நான் நிற்பேன். அவரிடம் எப்போதும் ஏதாவது ஒரு யோசனையை சொல்லிக் கொண்டே இருப்பேன். ‘இதை அப்படி செய்யலாம், இந்த மாதிரி முயற்சித்து பார்த்தால் நன்றாக இருக்கும்’ என்றெல்லாம் ஆட்டம் தொடர்பாக நிறைய யோசனைகளை தெரிவிப்பேன். சிலவற்றை நிராகரித்து விடுவார். சில யுக்திகளை ஏற்றுக்கொண்டு அது பற்றி விவாதிப்பார்.வீடியோ: மின்னல் அடிக்கும் போது தன் மகளை பைக்கில் வைத்து சுற்றும் தல தோனி 1

இன்னொரு பக்கம் அவர் தொடர்ந்து எனது செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து கொண்டே இருப்பார். இதன் மூலம் தனக்கு பிறகு கோலியால் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை அவருக்குள் ஏற்பட்டது. நானும் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ‘டோனி விலகி விட்டார், அடுத்து அணியின் கேப்டன் நீங்கள் தான்’ என்று தேர்வாளர்கள் திடீரென சொல்வது போன்ற சம்பவம் எனக்கு நடந்து விடவில்லை. 6-7 ஆண்டுகள் எனது நடவடிக்கைகள், வளர்ச்சியை கவனித்து தான் கேப்டன் பொறுப்புக்கு என்னை டோனி பரிந்துரைத்திருக்கிறார். எனவே இந்திய அணியின் கேப்டனாக நான் நியமிக்கப்பட்டதில் டோனிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்று கோலி கூறினார்.

  • SHARE
 • விவரம் காண

  வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திரத்திற்கு கொரோனா? பரிசோதனைக்கு முன்னரே மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி!

  வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திர வீரருக்கு கொரோனா; இந்த பிரச்சினையால் ஏற்பட்ட விளைவு! ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்துவந்த சிஎஸ்கே வீரருக்கு காய்ச்சல் வந்ததால்,...

  இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை !!

  இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை டி.20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்க இருப்பதை நினைத்தாலே தனக்கு பயமாக இருப்பதாக...

  இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

  இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து ஒயிட் பால் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட...

  நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் தனக்கு அதிக தொல்லை கொடுக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் யார்...

  வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களடா..? முடிவுக்கு வந்தது சூதாட்ட வழக்கு !!

  வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களடா..? முடிவுக்கு வந்தது சூதாட்ட வழக்கு இந்திய அணி வெற்றிபெறும் வகையில் இலங்கை வீரர்கள் விளையாடியதற்கான எந்த ஆதாரமும்...