வீடியோ.., கே.எல் ராகுலிற்கு தமிழில் பேசி பாடம் எடுத்த முரளி விஜய் !! 1
வீடியோ.., கே.எல் ராகுலிற்கு தமிழில் பேசி பாடம் எடுத்த முரளி விஜய்

தென் ஆப்ரிக்கா அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில், முரளி விஜய் தமிழில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது.

Cricekt, India, South Africa, Aiden Markram
Jasprit Bumra of India celebrates the the wicket of Hashim Amla of South Africa during the third day of the second Sunfoil Test match between South Africa and India held at the Supersport park Cricket Ground in Centurion, South Africa on the 15th January 2018 Photo by: Ron Gaunt / BCCI / SPORTZPICS

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 335 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்ததாக முதல் இன்னிங்ஸில் துவங்கிய இந்திய அணிக்கு கேப்டன் கோஹ்லி தனி ஒருவனாக போராடி 153 ரன்கள் எடுத்து கைகொடுத்ததன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 307 எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து தென் ஆப்ரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 258 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்திய அணிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

வீடியோ.., கே.எல் ராகுலிற்கு தமிழில் பேசி பாடம் எடுத்த முரளி விஜய் !! 2

இன்று ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில்   277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் முரளி விஜய்(9), கே.எல் ராகுல் (4), கோஹ்லி(5) என வழக்கம் போல் வந்த வேகத்தில் வெளியேறியத மூலம் இந்திய அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. பார்தீவ் பட்டேல் 5 ரன்களுடனும், புஜாரா 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இதில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது போட்டியின் 4 வது ஓவரை தென் ஆப்ரிக்காவின் ரபாடா வீசினார். அந்த ஓவரில் களத்தில் நின்றிருந்த தமிழக வீரர் முரளி விஜய், மறுமுனையில் நின்றிருந்த கே.எல் ராகுலிடம் “மச்சான், இவன் எல்லா பந்தையும் உள்ளா தாண்டா போடுறான்” என்று தமிழில் பேசி டிப்ஸ் கொடுத்தார். விஜயின் இந்த டயலாக் ஸ்டெம்பில் வைக்கப்பட்டிருந்த மைக்கில் பதிவாகியுள்ளது.

வீடியோ;

https://youtu.be/vV7iqvezdV4

முரளி விஜய் தமிழில் பேசிய வீடியோ சமூக  வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் முரளி விஜயை பாராட்டி வரும் அதே வேளையில், வடநாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் சிலர், இந்தியாவிற்காக விளையாடும் போது எதற்காக முரளி விஜய் தமிழில் பேச வேண்டும், இது அசிங்கமான செயல்” என்று வழக்கம் போல் தங்களது இந்தி திணிப்பை சமூக வலைதளங்களில் காட்டி வருகின்றனர்.

இதே போல் இந்திய கேப்டன் கோஹ்லி தென் ஆப்ரிக்கா வீரர்களை திட்டியது மற்றும் இஷாந்த்  சர்மாவிற்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்த பேச்சுக்களும் ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகி வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.