வீடியோ; வம்புக்கு இழுத்த கம்மின்ஸ்; சட்டை செய்யாத ரிஷப் பண்ட்

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்ட்டில் நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, புஜாராவின் அபார சதத்தால் 250 ரன்களை சேர்த்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி என்றாலே பரபரப்புக்கும் மோதலுக்கும் பஞ்சமே இருக்காது. எதிரணி வீரர்களை வம்புக்கு இழுப்பது, ஸ்லெட்ஜிங் செய்து விக்கெட்டை வீழ்த்த நினைப்பது எல்லாம் ஆஸ்திரேலிய அணியின் வியூகங்களில் ஒன்று. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி என்றாலே முட்டும் மோதலுமாக இருக்கும்.

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சற்றும் சளைக்காத சண்டக்கோழி நம்ம கேப்டன் கோலி. எனவே இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்கேற்றபடியே தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி ஸ்லெட்ஜிங் செய்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கோலி அளித்த பேட்டி, ரசிகர்களுக்கு டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் எகிறவிட்டது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு, ரசிகர்கள் மற்றும் ஆஸ்திரேலிய மக்களின் நம்பகத்தன்மையையும் மதிப்பையும் மீட்டெடுப்பதற்காக முன்புபோல் ஆஸ்திரேலிய அணி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடக்கூடாது என்று முடிவெடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் அடையாளமான ஸ்லெட்ஜிங்கை விட்டுவிடக்கூடாது என்று பாண்டிங் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்தனர்.

இவ்வாறாக போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே பெரும் கவனத்தை ஈர்த்தது ஸ்லெட்ஜிங் குறித்த விஷயம்தான். அப்படி இருக்க, நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட், களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடினார். ஆஸ்திரேலிய பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய அவரிடம் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் சில வார்த்தைகளை வேண்டுமென்றே உதிர்த்தார். ரிஷப் பண்ட்டை நோக்கி சில வார்த்தைகளை உதிர்த்தார். ஆனால் அதை ரிஷப் பண்ட் சற்றும் பொருட்படுத்தவேயில்லை. கம்மின்ஸின் வார்த்தைகளை கண்டுகொள்ளாமல் இருந்தார் ரிஷப் பண்ட்.

இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  • SHARE

  விவரம் காண

  டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது: விருதிமான் சஹா!!

  டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது என்று கூறியுள்ளார் விருதிமான் சஹா!! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில்...

  பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார் !!

  பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார்  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியை இந்திய அணி புறக்கணிக்க கூடாது என சச்சின்...

  பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..?

  பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..? காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்ரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ- முகமது நடத்திய தற்கொலை...

  ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா !!

  ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து...

  அரசு சொல்வதை செய்வோம்: ரவி சாஸ்திரி!!

  புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் பாகிஸ்தானுக்கு எதிராகக் குவிந்து வரும் நிலையில், உலகக்கோப்பைப் போட்டிகளில்...