வீடியோ; தோனியாக மாறிய இளம் வீரர் ரிஷப் பண்ட் !! 1

வீடியோ; தோனியாக மாறிய இளம் வீரர் ரிஷப் பண்ட்

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்ட்டில் நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, புஜாராவின் அபார சதத்தால் 250 ரன்களை சேர்த்தது.

பின்னர் இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலயா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோரின் துள்ளியமான பந்து வீச்சை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களால் திறமையாக எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் ஆஸ்திரேலியா சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து கொண்டு வந்தது.

வீடியோ; தோனியாக மாறிய இளம் வீரர் ரிஷப் பண்ட் !! 2
Australia’s Shaun Marsh drags the ball onto his stumps to be out bowled during the first cricket test between Australia and India in Adelaide, Australia,Friday, Dec. 7, 2018. (AP Photo/James Elsby)

இதனால் 3-வது வீரராக களம் இறங்கிய கவாஜா தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். 125 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 28 ரன்கள் சேர்த்தார். முதல் ஓவரிலேயே களம் இறங்கிய அவர், 40-வது ஓவரில் ஆட்டமிழந்தார். 40-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை கவாஜா எதிர்கொள்ளும்போது பந்து கையுறையில் (Glove) உரசி ரிஷப் பந்திடம் தஞ்சமடைந்தது. ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. இந்தியா ரிவியூ கேட்க, பின்னர் விக்கெட் கொடுக்கப்பட்டது.

கவாஜா கேட்ச் கொடுத்ததும் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், ‘‘இங்கே எல்லோரும் புஜாரா ஆகிவிட முடியாது’’ என்று ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்குப்பின் ஆஸ்திரேலியா எதிரணிகளை விரும்பும் வகையில் விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதே போல், ஸ்டெம்பிற்கு பின்னால் நின்று கொண்டு தோனியை போலவே பந்துவீச்சாளர்களுக்கு தேவையான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கொடுக்கும் வேலையையும் இந்த தொடரில் ரிஷப் பண்ட் அதிகமாக செய்து வருகிறார்.

வீடியோ; தோனியாக மாறிய இளம் வீரர் ரிஷப் பண்ட் !! 3

குறிப்பாக இன்றைய ஆட்டத்தில் ட்ர்வீஸ் ஹெட் களத்தில் நின்றிருந்த போது, விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் ஸ்டெம்பிற்கு பின்னால் நின்று கொண்டு, பந்துவீச்சாளர்களிடம் டர்வீஸ் ஹெட் ஷார்ட் பந்துகளுக்காக காத்துள்ளார், அவருக்கு ஷார்ட் பந்துகள் வீசாதீர்கள் என்று தொடர்ந்து கூறி கொண்டே இருந்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *