இந்திய அணி வீரர்கள் ஃபீல்டில் மட்டுமல்லாது, ஃபீல்டுக்கு வெளியிலும் அவரிகள் நேரத்தை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார்கள். டி20 போட்டியில் கைப்பற்றிய பிறகு, ஒருநாள் போட்டியில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது இந்திய அணி.

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்பு, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் மற்றும் சில வீரர்கள் தங்களின் நேரத்தை கரீபியனில் மகிழ்ச்சியாக செலவழித்து வருகிறார்கள். ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் தண்ணீரில் நேரம் கழிக்கும் வீடியோவை பகிர்ந்தனர்.

 

இன்ஸ்டாகிராமில் ஸ்ரேயாஸ் ஐயர், நிக்கோலஸ் பூரான், கீரன் பொல்லார்ட், ரிஷப் பன்ட், நவ்தீப் சைனி மற்றும் கலீல் அகமது ஆகியோருடன் கடைசி ஒருநாள் போட்டிக்கு முன்பு ஸ்பெயினில் நேரம் கழிக்கும் வீடியோவை பகிர்ந்தார்.

 

இந்தியா இப்போது ஒருநாள் போட்டியில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது. முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. புதன்கிழமை கடைசி ஒருநாள் போட்டியை மேற்கிந்திய தீவுகள் வென்றால், ஒருநாள் தொடர் ட்ராவில் முடிய வாய்ப்புள்ளது.

 

ஒருநாள் தொடர் முடிந்த பிறகு இரு அணிகளும்,ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடரை ஆடவுள்ளது.

இந்திய அணியின் ஒருமாத கால சுற்றுப்பயணம் வரும் செப்டம்பர் மாதம் 3ம் தேதி ஜமைக்காவில் முடிவடைகிறது.

 

 

View this post on Instagram

Open water, the greenery and fresh air = bliss. 😄

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on

 

 

View this post on Instagram

You can’t tell me I ain’t fly!

A post shared by Shreyas Iyer (@shreyas41) on

மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் டிஎல் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 2-வது ஒருநாள் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 7விக்கெட் இழப்புக்கு 279 ரன்களைக் குவித்தது. கேப்டன் கோலி 120, ஷிரேயஸ் ஐயர் 71 ரன்களை விளாசினர்.

மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு மே.இ. தீவுகள் அணிக்கு 46 ஓவர்களில் 270 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சால் மே.இ. தீவுகள் அணி 42 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லூயிஸ் அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் புவனேஸ்வர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான சுனில் கவாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தோனி போல ரிஷப் பந்தும் 5-ம் நிலை, 6-ம் நிலை வீரராகக் களமிறங்கவேண்டியவர். அவருடைய இயற்கையான ஆட்டம் அதற்குப் பொருந்தும். முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் 40 ஓவர்கள் வரை விளையாடினால், அப்போது வேண்டுமானால் பந்தை 4-ம் நிலை வீரராகக் களமிறக்கலாம். ஆனால் 30-35 ஓவர்கள் விளையாடவேண்டும் என்கிற நிலை ஏற்பட்டால் ஷ்ரேயாஸ் ஐயரைதான் நான் பரிந்துரைப்பேன். பிறகு 5-ம் நிலை வீரராக பந்த் களமிறங்கலாம். விராட் கோலியுடன் இணைந்து விளையாடும்போது ஸ்ரேயஸ் ஐயர் நிறைய கற்றுக்கொள்வார் என்று கூறியுள்ளார். • SHARE

  விவரம் காண

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி !!

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி ஒவ்வொரு போட்டிக்கும் தேவையான ஆடும் லெவனை தேர்வு செய்வதில்...

  இந்திய அணி அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது; சீன் போடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் !!

  முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 2ம் நாள் முடிவில் 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இஷாந்த் சர்மா...

  ஆர்ச்சரிடன் அடவாடிக்கு ஆப்படித்த ஆஸ்திரேலியா!! இங்கிலாந்துதிற்கு எட்ட முடியாத இலக்கு நிர்ணயம்!

  லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இங்கிலாந்து...

  இஷாந்த் சர்மா 5 விக்கெட் எடுக்க பும்ரா கொடுத்த மிக வித்யாசமான ஐடியா!! இஷாந்த் சர்மா வெளியிட்ட தகவல்

  2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளும், இந்தியாவும் ஆடுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள்...

  அடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு!! ஓய்வை அறிவிக்கப்போகும் சீனியர் வீரருக்கு அணியில் இடம்!!

  நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை-நியூசிலாந்து அணிகள்...