வீடியோ; தேவை இல்லாத ஷாட் அடித்து விக்கெட்டை இழந்த ரோஹித் சர்மா

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா தேவை இல்லாத ஷாட் அடித்து பரிதாபமாக விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் இன்று துவங்கியது.

ADELAIDE, AUSTRALIA – DECEMBER 06: Pat Cummins of Australia celebrates with Usman Khawaja of Australia after taking a catch to dismiss Virat Kohli 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

100 ரன்களுக்கு உள்ளாகவே 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி அதிர்ச்சியளித்தது. வழக்கம்போலவே ராகுல் வந்ததுமே 2 ரன்களில் நடையை கட்ட, முரளி விஜய்(11), கோலி(3), ரஹானே(13), ரோஹித் (37) என வரிசையாக வெளியேறினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிதானமாக ஆடிவரும் புஜாராவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடிவருகிறார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் கேப்டன் கோலி, 3 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அது ஒரு அற்புதமான கேட்ச். பாட் கம்மின்ஸ் வீசிய 11வது ஓவரின் மூன்றாவது பந்து, கோலியின் பேட்டில் எட்ஜாகி சென்றது. அந்த பந்தை அபாரமாக ஜம்ப் செய்து கேட்ச் பிடித்தார் கவாஜா. கவாஜா பிடித்த கேட்ச்சை பார்த்து அதிர்ச்சியான கோலி, ஒரு நல்ல கேட்ச்சின் மூலம் ரன் குவிக்க முடியாத ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

வீடியோ;

இதே போல் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ள ரோஹித் சர்மா 61 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரியுடன் 37 ரன்கள் எடுத்திருந்த போது தேவை இல்லாத ஷாட் அடித்து மார்கஸ் ஹரீஸிடன் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

ரோஹித் சர்மா கவனக்குறைவுடன் விளையாடி அவுட்டான இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் தங்களது ஆதங்கங்களை சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர் .



  • SHARE

    விவரம் காண

    டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது: விருதிமான் சஹா!!

    டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது என்று கூறியுள்ளார் விருதிமான் சஹா!! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில்...

    பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார் !!

    பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார்  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியை இந்திய அணி புறக்கணிக்க கூடாது என சச்சின்...

    பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..?

    பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..? காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்ரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ- முகமது நடத்திய தற்கொலை...

    ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா !!

    ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து...

    அரசு சொல்வதை செய்வோம்: ரவி சாஸ்திரி!!

    புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் பாகிஸ்தானுக்கு எதிராகக் குவிந்து வரும் நிலையில், உலகக்கோப்பைப் போட்டிகளில்...