Cricket, Pakistan, Sarfraz Ahmed, Pakistan Test Captain

சாம்பியன்ஸ் டிராபி 2017 இறுதி போட்டியில் இந்திய அணியை 180 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு ‘மவுக்கா மவுக்கா’ என பாடி இந்திய அணியை கலாய்த்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹ்மத்.

நான்கு நாட்களுக்கு முன்பு சாம்பியன்ஸ் டிராபி 2017 இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது வென்றது பாகிஸ்தான்.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சாளர்களை பிரித்து மேய்ந்தனர். இதனால், பக்கர் சமானின் அதிரடி சதத்தால் பாகிஸ்தான் அணி 338 ரன் அடித்தது. பிறகு இந்த கடினமான இலக்கை துரத்தியது இந்தியா.

ஆரம்பத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.முதல் ஓவரில் ரோகித் சர்மா வெளியேற, மூன்றாவது ஓவரில் இந்திய கேப்டன் விராட் கோலி பெவிலியன் திரும்பினார். ஷிகர் தவான் மற்றும் யுவராஜ் சிங் ஜோடி இந்திய அணியை காப்பாற்றும் என இந்திய ரசிகர்கள் நினைத்த போது, ஜோடியும் பிரிந்தது. அடுத்து வந்த தோனி, கேதார் ஜாதவ் நிலைத்து நிற்காத நிலையில், இந்திய அணி 100 ரன் கூட தொடாது என நினைத்தார்கள்.

 

ஆனால், அடுத்து வந்த ஹர்டிக் பாண்டியா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை ஒரு கை பார்த்தார். 6 சிக்ஸர், 4 பவுண்டரி என நான்கு திசையிலும் பந்தை பறக்கவிட்டார் ஹர்டிக் பாண்டியா. சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் வாங்கினார். இவர் தான் இந்தியாவின் கடைசி நம்பிக்கை என்று நினைக்கும் போது, பாண்டியாவை ரன்-அவுட் செய்தார் ரவீந்திர ஜடேஜா. இதனால், இந்திய அணி 158 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்த போட்டி முடிந்த பிறகு 100 கணக்கான பாகிஸ்தான் ரசிகர்களுடன் ‘மவுக்கா மவுக்கா’ பாட்டு பாடி இந்திய அணியை கலாய்த்தார் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மத். அந்த வீடியோவை இங்கே பாருங்கள்:

https://www.youtube.com/watch?v=3r2P-FTxTMY



  • SHARE
    Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

    விவரம் காண

    ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!!

    எப்பொழுது : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், ஏப்ரல் 26 இரவு 8 மணியளவில் எங்கே : இராஜீவ்காந்தி சர்வதேச மைதானம்,...

    ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதல்!!! சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் கணிக்கப்பட்ட அணி!!!

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்று (ஏப்ரல் 26) நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ஹைதராபாத் அணி...

    ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதல்!!! கிங்க்ஸ் லெவன் பஞ்சாபின் கணிக்கப்பட்ட அணி!!!

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்று (ஏப்ரல் 26) நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி...

    இது வின்டேஜ் தல…. கடைசி 7 ஓவருக்கு 100 ரன் சேசிங்!! தோனி, ராயுடுவை புகழந்து தள்ளும் ட்விட்டர் உலகம்!!

    பெங்களூரு: ஐபிஎல் தொடரின் 24-வது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ்...

    மான்செஸ்டரில் நடக்கிறது இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போர்; முழு அட்டவணை உள்ளே !!

    மான்செஸ்டரில் நடக்கிறது இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போர்; முழு அட்டவணை உள்ளே அடுத்த ஆண்டு 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் லீக்...