வீடியோ: தென்னாபிரிக்காவில் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய கோலி மற்றும் தவான் 1

திருமண வரவேற்பு விழாவில் இருந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் வெளியே வரவில்லை என்று தெரிகிறது. மும்பையில் நடந்த விராட் கோலி திருமண வரவேற்பில் கோலி மற்றும் தவான் ஆகியோர் ஸ்டேஜில் டான்ஸ் ஆடி அமர்க்கள படுத்தினார்கள்.

முக்கிய தொடருக்காக விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இந்திய அணியுடன் தென்னாப்ரிக்காவிற்கு சென்றுள்ளார்கள், அங்கு இறங்கியதும் டான்ஸ் ஆடி ரசிகர்களை குஷி படுத்தினார்கள் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான்.

Cricket, India, Virat Kohli, Shikhar Dhawan
Virat Kohli captain of India and Shikhar Dhawan of India celebrates the wicket of Colin de Grandhomme of New Zealand during the 1st T20I match between India and New Zealand held at the Feroz Shah Kotla Stadium in New Delhi. 1st November 2017
Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS

கிரிக்கெட் போட்டியின் போது இரண்டு வீரர்களும் பாங்க்ரா செய்வது வழக்கம். தென்னாபிரிக்காவில் காலடி எடுத்து வைத்ததும் அதே போல் செய்து தெருவில் இருந்த ரசிகர்களை குஷி படுத்தினார்கள். முதலில் ஷிகர் தவான் டான்ஸ் ஆட தொடங்கியதும், அவருடன் இணைந்து டான்ஸ் ஆடினார் விராட் கோலி.

https://www.instagram.com/p/BdWrwMmjdU2/

தென்னாப்ரிக்காவுடன் விளையாடவுள்ள முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5ஆம் தேதி கேப்டவுனில் நடக்கிறது. இதுவரை தென்னாபிரிக்காவில் ஒரே ஒரு டெஸ்ட் தொடரை கூட இந்திய அணி வென்றதில்லை. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 9 தொடர்களை வென்றுள்ளதால், இந்த முறை இந்திய அணி வெற்றி பெரும் அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

வீடியோ: தென்னாபிரிக்காவில் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய கோலி மற்றும் தவான் 2
Virat Kohli captain of India raises his bat after scoring 100runs during day one of the 3rd test match between India and Sri Lanka held at the Feroz Shah Kotla Stadium in Delhi on the 2nd December 2017 Photo by Deepak Malik / BCCI / Sportzpics

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *