வீடியோ : டு ப்லேசிசை ஆக்ரோஷமாக கத்தி அனுப்பி வைத்த விராட் கோலி 1
India bowler Hardik Pandya is celebrated by teammates after bowling out South Africa batsman Faf du Plessis during Day One of the cricket First Test match between South Africa and India in Cape Town, on January 5, 2018. / AFP PHOTO / MARCO LONGARI (Photo credit should read MARCO LONGARI/AFP/Getty Images)

 

இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே 12 ரன்கள் எடுப்பதற்குள் தென் ஆப்ரிக்கா அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 3 விக்கெட்டுகளையும் புவனேஷ்குமார் சாய்த்தார். எல்கர்(0), மர்க்ரம்(5), ஹசிம் அம்லா(3) ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் டிவில்லியர்ஸ் மற்றும் கேப்டன் டூபிளிசிஸ் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். டூபிளிசிஸ் நிதாமனமாக விளையாட டிவில்லியர்ஸ் பவுண்டரிகளாக விளாசினார்.

வீடியோ : டு ப்லேசிசை ஆக்ரோஷமாக கத்தி அனுப்பி வைத்த விராட் கோலி 2

இருவரும் விக்கெட் விளாமல் பார்த்துக் கொண்டனர். 55 பந்துகளில் டிவில்லியர்ஸ் அரைசதம் விளாசினார். இதனால் 25.1 ஓவரிலேயே தென் ஆப்ரிக்கா அணி 100 ரன்களை எட்டியது. சிறப்பாக விளையாடிய டு பிளிசிஸ் 98 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

வீடியோ : டு ப்லேசிசை ஆக்ரோஷமாக கத்தி அனுப்பி வைத்த விராட் கோலி 3

அதிரடியாக விளையாடிய ட்வில்லியர்ஸ் 65 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இது பும்ராவுக்கு முதல் டெஸ்ட் விக்கெட் ஆகும். அவரை தொடர்ந்து டுபிளிசிஸ் 62 ரன்னில் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்த விக்கெட்டை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, விக்கெட் விழுந்ததும் ஆக்ரோஷமாக ஓடி சென்று டு ப்லேசிசை பார்த்து கத்தினார். கிட்டத்தட்ட அவரது முகத்திற்கு அருகில் சென்று கத்திவிட்டார் கோலி.

நீண்ட நேரமாக இந்தியாவிற்கு தண்ணிய காட்டிய இவரது விக்கெட் விழுந்ததும் கோலி இயல்பிலேயே ஆக்ரோஷமானவர் என்பதை நிரூபிக்கும் வகையில் டு ப்லேசிசை வெளியே அனுப்பி வைத்தார்.

அந்த வீடியோ கீழே :

https://twitter.com/ashusingh0218/status/949249884376334336

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *