அண்டர்-17 கால்பந்து உலகக்கோப்பை அணிக்கு விராட் மனம் திறந்து வாழ்த்து!! 1

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அண்டர்-17  கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கு பெறும் இந்திய அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வரும் 6ஆம் தேதி இந்தியாவில் அண்டர்-17 கால்பந்து உலக்ககோப்பை தொடர் துவங்கவுள்ளது. இதுவே கால்பந்து கூட்டமைப்பு (ஃபீபா) இந்தியாவில் நடத்தும் முதல் சர்வதேச தொடராகும். இது இந்தியாவிற்க்கு சற்று பெருமை சேர்க்கும் விசயமாகும்.

அக்.6ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 6 மைதானங்களில் இந்த உலக்ககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. மொத்தம் 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தியா தனது முதல் லீக் போட்டியில் தனது குழுவில் உள்ள வலிமை வாய்ந்த அமெரிக்க அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இந்த முதல் போட்டி மற்றும் தொடருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி.

அந்த வீடியோ பதிவு கீழே :

கொல்கத்தா, கொச்சி, டெல்லி, மும்பை, கவுகாத்தி, கோவா ஆகிய 6 நகரங்களில் அரங்கேறுகிறது. இதில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடத்தை பெறும் அணிகளில் சிறப்பான 4 அணிகளும் அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும்.

தொடக்க நாளான 6-ந் தேதி டெல்லியில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள கொலம்பியா-கானா (மாலை 5 மணி), இந்தியா-அமெரிக்கா (இரவு 8 மணி) அணியும், மும்பையில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து-துருக்கி (மாலை 5 மணி), பராகுவே-மாலி (இரவு 8 மணி) அணியும் மோதுகின்றன.

இந்த நிலையில் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 3 முறை சாம்பியனான பிரேசில் அணி .

அந்தேரியில் நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் பிரேசில் அணி, நியூசிலாந்துடன் மோதுகிறது. முதல் நாளில் மும்பையில் நடைபெறும் 2 லீக் ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் 20 ஆயிரம் விற்பனை ஆகி இருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *