வீடியோ: விக்கெட் எடுத்த விராட் கோலி, ஜாலி மூடில் செலிபரேசன்!! 1

இந்திய அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய லெவன் அணி அபாரமாக ஆடி, 544 ரன்கள் குவித்தது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. டிசம்பர் 6 ஆம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது. இதை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது.வீடியோ: விக்கெட் எடுத்த விராட் கோலி, ஜாலி மூடில் செலிபரேசன்!! 2

இதற்கிடையே, இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான இந்த 4 நாள் பயிற்சி ஆட்டம் சிட்னியில் தொடங்கியது. இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்தது. பிருத்வி ஷா, புஜாரா, ரஹானே, கோலி, விஹாரி ஆகிய ஐந்து வீரர்கள் அரைசதம் அடித்தனர். தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய லெவன் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை அமர்க்களமாக எதிர்கொண்டது. இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அவர்கள் ’தண்ணி’ காட்டினர். இந்திய தரப்பில் கேப்டன் விராத் உட்பட 10 பேர் பந்துவீசியும் அவர்களை கட்டுப்படுத்தவில்லை. அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 544 ரன்கள் குவித்தது. டியார்ஸி ஷார்ட், பிரியன்ட், ஹார்டி ஆகியோர் அரைசதம் அடித்தனர். விக்கெட் கீப்பர் நீல்சன் சதம் அடித்தார். அவரது விக்கெட்டை விராத் கோலி வீழ்த்தினார்.வீடியோ: விக்கெட் எடுத்த விராட் கோலி, ஜாலி மூடில் செலிபரேசன்!! 3

முகமது ஷமி 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, விராத் கோலி, பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.

பின்னர் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. பிருத்வி ஷா காயம் காரணமாக வெளியேறியதால், கே.எல்.ராகுலும் முரளி விஜய்யும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தது.

 

இந்திய அணியில் 10 வீரர்கள் பந்து வீசினார்கள். ஆனால், ஆஸ்திரேலிய லெவன் அணியினருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்துவீச்சு அமையாததன் விளைவுதான் அந்த அணியை 544ரன்கள் சேர்க்க முடிந்தது. குறிப்பாக உமேஷ் யாதவ், முகமது ஷமி இருவரும் அதிகமான ரன்களைக் கொடுத்தனர். அனுபவம் இல்லாத வீரர்களிடம் 40 ஓவர்கள் வீசி 122 ரன்கள் வரை அஸ்வின் விட்டுக்கொடுத்ததும் கேள்விக்குரியதாகும்.வீடியோ: விக்கெட் எடுத்த விராட் கோலி, ஜாலி மூடில் செலிபரேசன்!! 4

உணவு இடைவேளைக்குப்பின் முரளிவிஜய், கே.எல்.ராகுல் களமிறங்கினார்கள். பிரித்வி ஷா காயத்தால் விளையாட முடியாத சூழலில் முரளி விஜயன் களமிறங்கினார். கடந்த இங்கிலாந்து தொடருக்கு பின் அணியில் இருந்து நீக்கப்பட்ட முரளி விஜய் மேற்கிந்தியத்தீவுகள் தொடரில் இல்லை. இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் சிறப்பாக ஆடியதால், மீண்டும் ஆஸ்திரேலியத் தொடருக்கு அழைக்கப்பட்டார்.

இன்றைய ஆட்டத்தில் முரளிவிஜய், ராகுல் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக முரளிவிஜய் தன்மீதான விமர்சனங்களை உடைக்கும் விதத்தில் பேட் செய்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 109 ரன்கள் சேர்த்தனர். கே.எல்.ராகுல் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடங்கும்.

 

முதல் இன்னிங்ஸில் ஆட வாய்ப்புக்கொடுக்காதற்கு பழிவாங்கும் விதமாக, இந்த இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடியானார் முரளி விஜய். அவர் 132 பந்துகளில் 129 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்சர்களும் 16 பவுண்டரிகளும் அடங்கும். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விஹாரி 15 ரன்கள் எடுத்தார். இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது.வீடியோ: விக்கெட் எடுத்த விராட் கோலி, ஜாலி மூடில் செலிபரேசன்!! 5

அடுத்துவந்த ஹனுமா விஹாரி, முரளி விஜய்க்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதிரடியாக பேட்ச செய்த முரளிவிஜய், 132 பந்துகளில் 129 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள் 16 பவுண்டரிகள் அடங்கும். விஹாரி 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்திய அணி கடைசி நாளில் 43.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்தது.

 

https://twitter.com/PRINCE3758458/status/1068693429025103872

 

Rajeshwaran Naveen

Cricket Fan - Dhoni Lover - CSK Forever

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *