வீடியோ; இரண்டு பந்தில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கையை மிரளவிட்ட சாஹல் !! 1

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும், இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறி வருகிறது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இலங்கையின் கொழும்பில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

வீடியோ; இரண்டு பந்தில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கையை மிரளவிட்ட சாஹல் !! 2

இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு பெர்னாண்டோ மற்றும் பனுகா ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

போட்டியின் முதல் ஓவரில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இந்த கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்ந்திருந்த போது சாஹல் தனது துல்லியமான பந்துவீச்சால் இந்த கூட்டணியை பிரித்தார்.

போட்டியின் 13வது ஓவரின் 2வது பந்தில் பனுகாவின் (36 ரன்கள்0 விக்கெட்டை வீழ்த்திய சாஹல், அதற்கு அடுத்த பந்திலேயே பனுகா ராஜபக்சேவின் (0) விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர்.

அடுத்தடுத்து களமிறங்கும் வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருவதால் போட்டியின் 42வது ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இந்திய அணி சார்பில் இதுவரை சாஹல் 3 விக்கெட்டுகளையும், சாஹர் இரண்டு விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *