ஆஸ்திரேலிய அணியுடனான தோல்வி காரணம் இது தான்; விராட் கோஹ்லி வேதனை

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணி, அடுத்து, ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி, சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து, 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்தது. அந்த அணியில், ஹேண்ட்கோம்ப் 73, கவாஜா 59, மார்ஸ் 54 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் குல்தீப், புவனேஸ்வர் குமார் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர்.

289 ரன் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 4 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. தவான், ராயுடு டக் அவுட் ஆக, கேப்டன் விராட் கோலி 3 ரன்னில் ஏமாற்றினார். இதனையடுத்து, ரோகித் சர்மாவும், தோனியும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். தோனி நிதானமாக விளையாட, ரோகித் சற்றே அடித்து விளையாடி ரன்களை சேர்த்தார். இந்திய அணி 25.2 ஓவரில் 100 ரன்களை எட்டியது.

93 பந்தில் அரைசதம் அடித்த தோனி, 51 ரன்னில் அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்திருந்தது. அடுத்து வந்த தினேஷ் கார்த்திக்கும் 12 ரன்னில் நடையைக் கட்டினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 110 பந்தில் சதம் விளாசினார். 42.3 ஓவரில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது. வெற்றி பெற இன்னும் 6 ஓவர்களில் 76 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. சதம் அடித்த உடன் ரோகித் சிக்ஸரும், பவுண்டரியுமான விளாசினார். இருப்பினும் 129 பந்தில் 133 ரன் அவுட் ஆனார். இந்திய அணி வெற்றி பெற  இறுதிவரை போராடியது. இருப்பினும், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பு 254 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியா 34 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியுடனான இந்த தொல்வி குறித்து இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பேசியதாவது, “நாங்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 289 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கு தான், நாங்கள் 300+ ரன்கள் தான் இலக்காக வரும் என நினைத்தோம் ஆனால் 289 ரன்களையே எங்களால் எட்ட முடியாமல் போய்விட்டது. ரோஹித் சர்மா அசத்தலாக செயல்பட்டனர், தோனியும் அவருக்கு உதவியாக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவறான நேரத்தில் தோனி விக்கெட்டை இழந்த போதே வெற்றி எங்கள் கையை விட்டு சென்று விட்டது, தோல்விகளில் இருந்து பாடம் கற்று கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம்” என்றார்.



  • SHARE

    விவரம் காண

    யுவராஜ் சிங் அதிரடி வீண்…! மும்பை அணி தோல்வி! ட்விட்டர் ரியாக்சன்!!

    12-ஆவது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில்...

    வீடியோ; ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மாஸ் காட்டிய ரிஷப் பண்ட் !!

    வீடியோ; ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மாஸ் காட்டிய ரிஷப் பண்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் ருத்ரதாண்டம் ஆடியுள்ளார். ஐ.பி.எல்...

    பும்ராஹ்விற்கு ஓய்வு கொடுத்துவிடுங்கள்; ட்விட்டரில் ரசிகர்கள் வேண்டுகோள் !!

    பும்ராஹ்விற்கு ஓய்வு கொடுத்துவிடுங்கள்; ட்விட்டரில் ரசிகர்கள் வேண்டுகோள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு பும்ராஹ்விற்கு ஐ.பி.எல் தொடர் முழுவதிலும் இருந்து ஓய்வு வழங்க...

    ரிஷப் பன்ட் பேயடி!! டெல்லி அணி 213 ரன் குவிப்பு!! ட்விட்டர் ரியாக்சன்!!

    மும்பை மற்றும் டெல்லி அணிகள் இடையேயான முதல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் ஆடும் லெவன் ரோஹித்...

    ராஜஸ்தான் vs பஞ்சாப்: ராஜஸ்தான் மண்ணில் வெல்லுமா பஞ்சாப்?

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்.ஆர்) இரு அணிலும் 4வது ஆட்டத்தில் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில்...