வெளியே இஸ்டத்துக்கு பேசுராங்க! எனக்கு அத பத்தி கவலை இல்லை! நெத்தி அடி அடித்த விராட் கோலி! 1

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுள்ளது. இதனால் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

தோல்விக்குப் பிறகு இந்திய அணி கேப்டன் பேட்டியளித்ததாவது:

நாங்கள் நன்றாக விளையாடவில்லையென்று தெரியும். ஆனால் இதைப் பெரிய விஷயமாக மக்கள் நினைத்தால், பெரிதுபடுத்த நினைத்தால் நாங்கள் ஒன்றும் பண்ண முடியாது. நாங்கள் அதுபோல நினைக்கவில்லை.

வெளியே இஸ்டத்துக்கு பேசுராங்க! எனக்கு அத பத்தி கவலை இல்லை! நெத்தி அடி அடித்த விராட் கோலி! 2
WELLINGTON, NEW ZEALAND – FEBRUARY 23: Tim Southee of New Zealand celebrates with teammates after taking the wicket of Mayank Agarwal (L) of India during day three of the First Test match between New Zealand and India at Basin Reserve on February 23, 2020 in Wellington, New Zealand. (Photo by Hagen Hopkins/Getty Images)

இத்துடன் உலகம் முடிந்துவிட்டதாக சிலர் எண்ணலாம். எங்களுக்கு அப்படியல்ல. நாங்கள் ஒரு கிரிக்கெட் ஆட்டத்தில் தோற்றுள்ளோம். அதிலேயே நிற்காமல் நகர்ந்து அடுத்த வேலையில் கவனம் செலுத்துவோம். உள்ளூரில் விளையாடும்போதும் சர்வதேச கிரிக்கெட்டில் ஜெயிப்பது அவ்வளவு சுலபமல்ல. தோல்விகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுதான் எங்கள் அணியின் குணாதிசயம்.

வெளியில் பேசுபவர்களுக்கு மதிப்பு அளித்திருந்தால் இப்போதுள்ள நிலையில் இருக்க முடியாது. அதனால் தான் இதுபோன்ற தரத்தை எங்களால் வெளிப்படுத்த முடிகிறது. மற்றவர்கள் பேச்சுக்கு அதிக மதிப்பளித்திருந்தால் நாங்கள் இன்னமும் தரவரிசையில் 7, 8-ம் இடங்களில் தான் இருந்திப்போம். வெளியே மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை.

வெளியே இஸ்டத்துக்கு பேசுராங்க! எனக்கு அத பத்தி கவலை இல்லை! நெத்தி அடி அடித்த விராட் கோலி! 3
WELLINGTON, NEW ZEALAND – FEBRUARY 23: Trent Boult of New Zealand hits a six during day three of the First Test match between New Zealand and India at Basin Reserve on February 23, 2020 in Wellington, New Zealand. (Photo by Hagen Hopkins/Getty Images)

தோற்றுப்போவதால் எவ்வித அவமானமும் இல்லை. நாங்கள் சரியாக விளையாடவில்லை என்றுதான் அர்த்தம். இதனால் ஒரே நாளில் நாங்கள் மோசமான அணியாகிவிட்டோம் என்று அர்த்தமில்லை. எங்களுடைய எண்ணங்களை மாற்ற மக்கள் விரும்பலாம். ஆனால் அப்படி நடக்காது.

நாங்கள் கடுமையாக உழைப்போம். இத்தனை வெற்றிகளுக்குப் பிறகு ஒரு தோல்வியால் எங்களுடைய நம்பிக்கை சிதைந்துவிடாது என்று கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *