ஆஸ்திரேலியாவை அலறவிட இந்த வீரர்கள் போதும்; ரவி சாஸ்திரி அதிரடி !! 1

அசுர பலம் கொண்ட ஆஸ்திரேலிய அணியை இந்திய அணியால் வீழ்த்த முடியும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், முன்னாள், இந்நாள் கிரிக்கெ வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் இந்த தொடர் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவை அலறவிட இந்த வீரர்கள் போதும்; ரவி சாஸ்திரி அதிரடி !! 2

சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், முன்னாள், இந்நாள் கிரிக்கெ வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் இந்த தொடர் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியுடனான இந்த தொடர் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, இந்திய அணியால் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை அலறவிட இந்த வீரர்கள் போதும்; ரவி சாஸ்திரி அதிரடி !! 3

இது குறித்து ரவி சாஸ்திரி பேசுகையில், “ஆஸ்திரேலிய அணியை நம்மால் வீழ்த்த முடியும். நம்மிடம் ஐந்து சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். பும்ராஹ், முகமது ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி ஆகியோர் இந்த தொடரில் இந்திய அணியில் மிக முக்கிய பங்கு வகிப்பார்கள். உமேஷ் யாதவ் அனுபவ வீரர். நவ்தீப் சைனி இளம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள். பும்ராஹ் மற்றும் முகமது ஷமியை பற்றி சொல்லவே தேவை இல்லை. சிராஜ்ஜும் மிக சிறப்பாக செயல்படுவார். இந்த ஐந்து பந்துவீச்சாளர்களால் ஆஸ்திரேலிய அணியை திணறடித்து அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை அலறவிட இந்த வீரர்கள் போதும்; ரவி சாஸ்திரி அதிரடி !! 4

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி;

விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, மாயன்க் அகர்வால், ப்ரித்வி ஷா, கே.எல் ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, அஜிக்னியா ரஹானே, ஹனுமா விஹாரி, சுப்மன் கில், விர்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *