இது நடந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்; மும்பை அணியை எச்சரிக்கும் பயிற்சியாளர் !! 1

இது நடந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்; மும்பை அணியை எச்சரிக்கும் பயிற்சியாளர்

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் துவக்க வீரர்களான கே.எல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வாலின் விக்கெட்டை விரைவாக கைப்பற்றினால் மட்டுமே இன்றைய போட்டியில் மும்பை அணியால் வெல்ல முடியும் என மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தொடக்கம் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பாக அமையவில்லை. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் படுதோல்வியை சந்தித்தது. இரண்டாவது போட்டியில் கே.கே.ஆர். அணியை அதிக ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால், மூன்றாவது போட்டியில் பெங்களூர் அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்தது.

இது நடந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்; மும்பை அணியை எச்சரிக்கும் பயிற்சியாளர் !! 2

இந்நிலையில் இன்று நடைபெறும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி பஞ்சாப் அணியை மும்பை இந்தியன்ஸ் வீழ்த்துவது அவ்வளவு சுலபமாக இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும் அந்த அணியின் தொடக்க வீரர்களான கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில், இரு அணிகள் இடையேயான இன்றைய போட்டி குறித்து பேசியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் சேன் பாண்ட், கே.எல் ராகுல் மற்றும் மாயன்க் அகர்வாலின் விக்கெட்டை விரைவாக வீழ்த்தினால் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியால் பஞ்சாப் அணியை வீழ்த்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இது நடந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்; மும்பை அணியை எச்சரிக்கும் பயிற்சியாளர் !! 3

இதுகுறித்து ஷேன் பான்ட் கூறுகையில் ‘‘கடந்த போட்டிகளில் கே.எல். ராகுல் எங்களுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்துள்ளார். அவர் ஒரு தலைசிறந்த வீரர். நாங்கள் இன்று எங்கள் பந்து வீச்சாளர்களுடன் ஆலோசனை நடத்தினோம். அப்போது சிறப்பாக விளையாடும் அணிக்கு எதிராக எங்களுடைய திட்டத்தை தீட்டினோம். கே.எல். ராகுல் டைனமிக் வீரர். அவர் மைதானத்தின் எல்லா பக்கத்திற்கும் பந்தை அடிக்க கூடியவர்.

நாங்கள் தலைசிறந்த பவுலிங் யூனிட் வைத்துள்ளோம். எங்களால் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். பஞ்சாப் அணியின் இரண்டு பேட்ஸ்மேன்கள் இதுவரை சிறப்பாக விளையாடி வருகின்றனர். எங்களால் நெருக்கடி கொடுக்க முடியும் என்றால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அது நெருக்கடியாக அமையும். அவர்கள் ரன்கள் அடிப்பதை தடுத்து மிகப்பெரிய ஸ்கோரில் இருந்து எங்களை தற்காத்துக் கொள்ள முடியும். இந்த மைதானத்தில் இரண்டு முறை விளையாடி உள்ளோம். அதனால் சீதோஷ்ண நிலை குறித்து எங்களுக்கு தெரியும். இது எங்களுக்கு கூடுதலாக உதவியாக இருக்கும்’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *