நாங்க தான் ஜெயிச்சிருக்கனும்; புலம்பும் மும்பை வீரர் !! 1

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதற்கு இலகுவாக கிடைத்த வாய்ப்பை வீணடித்துவிட்டதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரரான கீரன் பொலார்ட் வேதனை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

நாங்க தான் ஜெயிச்சிருக்கனும்; புலம்பும் மும்பை வீரர் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான டிகாக் 53 ரன்களும், ஆல்ரவுண்டர் க்ரூணல் பாண்டியா 34 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய கீரன் பொலார்டு 12 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 176 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 177 ரன்க எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பினாலும், வழக்கம் போல் கே.எல் ராகுல் தனது பொறுப்பான ஆட்டத்தை இன்றும் வெளிப்படுத்தினார்.

நாங்க தான் ஜெயிச்சிருக்கனும்; புலம்பும் மும்பை வீரர் !! 3

கே.எல் ராகுல் 77 ரன்களில் விக்கெட்டை இழந்ததாலும், கடைசி நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சினாலும் இந்த போட்டி டிராவில் முடிந்தது.

இதனையடுத்து போடப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 5 ரன்கள் எடுத்தது. இரண்டாவதாக பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியும் அதே 5 ரன்கள் எடுத்ததன் மூலம் சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தது.

இதனால் மீண்டும் ஒரு முறை போடப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 11 ரன்கள் குவித்தது. இதனையடுத்து சூப்பர் ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கிரிஸ் கெய்ல் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து வெற்றியை இலகுவாக்கினார். மாயன்க் அகர்வாலும் தன் பங்கிற்கு பவுண்டரி அடித்ததன் மூலம் பஞ்சாப் அணி மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.

நாங்க தான் ஜெயிச்சிருக்கனும்; புலம்பும் மும்பை வீரர் !! 4

இந்தநிலையில் இந்த போட்டி குறித்து பேசியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரரான கீரன் பொலார்ட், வெற்றி பெறுவதற்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்து விட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய பொலார்ட், “டி.20 போட்டிகளில் ஒவ்வொரு ரன்னும் முக்கியம் என்பதை இந்த போட்டி மீண்டும் உணர்த்தியுள்ளது. பஞ்சாப் அணி இந்த வெற்றிக்கு முழு தகுதியானது. வெற்றி பெறுவதகு 170 ரன்கள் போதுமானது என்று தான் நினைத்தோம், ஆனால் கே.எல் ராகுல் மீண்டும் அருமையாக விளையாடி கொடுத்துள்ளார். இந்த போட்டியில் நாங்கள் தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும், ஆனால் தோல்வியடைந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *