பெங்களூரு vs கொல்கத்தா: "ரஸ்ஸலை நம்பினோம்.. அவர் கைவிடல" - தினேஷ் கார்த்திக் 1

ஐபிஎல் தொடரில் 17வது போட்டியாக பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் இன்றைய போட்டி பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பார்திவ் படேல் மற்றும் விராத் கோஹ்லி சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். பெங்களூரு அணியின் கேப்டன் கோஹ்லி இம்முறை ஏமாற்றாமல் அணிக்கு தனது பங்களிப்பை கொடுத்து ரசிகர்களை குஷி படுத்தினார்.

பெங்களூரு vs கொல்கத்தா: "ரஸ்ஸலை நம்பினோம்.. அவர் கைவிடல" - தினேஷ் கார்த்திக் 2

முதல் மூன்று போட்டிகளில் நன்றாக ஆடிய பார்திவ் படேல் இம்முறை விரைவாக வெளியேற டி வில்லியர்ஸ் வந்து தனது அதிரடியை வெளிப்படுத்தி வான வேடிக்கை காட்டினார். இதனால் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர துவங்கியது.

கோஹ்லி 84 ரன்கள் எடுத்து வெளியேறினார். டி வில்லியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக ஸ்டோனிஸ் சற்று அடிக்க 20 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்து பெங்களூரு அணி.

206 எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு நரேன் நல்ல துவக்கம் கொடுக்கவில்லை. ஆனால் அடுத்து வந்த ராபி லினுக்கு பக்கபலமாக இருக்க லின் அடுத்து துவம்சம் செய்தார்.

பெங்களூரு vs கொல்கத்தா: "ரஸ்ஸலை நம்பினோம்.. அவர் கைவிடல" - தினேஷ் கார்த்திக் 3

அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்ட லின் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த நிதிஸ் ராணா 37 மற்றும் கேப்டன் கார்த்திக் 19 ரன்களுக்கு வெளியேற 24 பந்துகளுக்கு 53 ரன்கள் தேவை என இருந்தது.

ஆனால் களத்தில் இருந்ததோ ரஸ்ஸல், மைதானத்தில் அனைத்து பக்கங்களிலும் பந்துகளை பறக்க விட்டு 5 பந்துகள் மீதம் வைத்து வென்று தந்துவிட்டார். 13 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார் ரஸ்ஸல்.

வெற்றி குறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது, அந்த வகைஆட்டம் குறித்து, நீங்கள் அதிகம் பேச தேவையில்லை. அவரை ஒரு வீரராக நம்புகிறோம். அவர் மகிழ்ச்சியாக உள்ள ஒரு சூழ்நிலையை அவருக்கு கொடுக்க வேண்டியது அவசியம். ஆமாம், ஸ்பின்னர்களை பந்தை பிடுங்குவதன் மூலம் ஸ்ட்ரோக் விளையாடும் கடினமாக இருந்தது, ஆனால் வேகமாக பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எளிதாக இருந்தது. நான் நன்றாக விளையாடினேன் என்று நினைக்கிறேன், நாம் அனைவரும் நன்றாக கிண்ணத்தை துவக்க நேரம் மற்றும் போராளிகள் உதவ நேரம். இது போன்ற லின்னி பேட் பார்க்க மற்றும் பொறுப்பு எடுத்து நன்றாக இருந்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *