இந்தியாவின் தோல்விக்கு இவர் இல்லாதது தான் காரணம் ; டூபிளசிஸ் ! 1

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரஹானே இல்லாமல் களமிறங்கியது தங்களுக்கே வியப்பளித்ததாக  தென் ஆப்ரிக்காவின் கேப்டன் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் கடந்த 5ம் தேதி துவங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு, டிவில்லியர்ஸ்(65), மற்றும் டூ பிளசிஸ் 62 ரன்கள் எடுத்து கைகொடுத்ததன் மூலம்  முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்த தென் ஆப்ரிக்கா அணி ஆல் அவுட்டானது.

இந்தியாவின் தோல்விக்கு இவர் இல்லாதது தான் காரணம் ; டூபிளசிஸ் ! 2

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணியில், ஹர்திக் பாண்டியாவை(93) தவிர மற்ற வீரர்கள் தென் ஆப்ரிக்காவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் வந்த வேகத்தில் நடையை கட்டியதால் 209 ரன்கள் மட்டுமே எடுத்தபோது இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

போட்டியை மாற்றிய மழை;

இதனையடுத்து 77 ரன்கள் முன்னிலையுடன்  இரண்டாம் இன்னிங்ஸை துவங்கிய தென் ஆப்ரிக்கா அணி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் எடுத்திருந்தது.

மழை தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் இந்த போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட போடமல் ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவின் தோல்விக்கு இவர் இல்லாதது தான் காரணம் ; டூபிளசிஸ் ! 3

இதனையடுத்து போட்டியின் நான்காம் நாளில் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா வீரர்கள், இந்தியாவின் ஷமி மற்றும் புவனேஷ்வர்க் குமார் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து அடுத்தடுத்து வெளியேறியதால் 130 ரன்களுக்கே தென் ஆப்ரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வெறும் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய வீரர்கள், தென் ஆப்ரிக்கா வீரர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல், அவர்களை விட மிக வேகமாக வந்த வேகத்தில் நடையை கட்டியதால் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

இந்தியாவின் தோல்விக்கு இவர் இல்லாதது தான் காரணம் ; டூபிளசிஸ் ! 4

இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு மிடில் ஆர்டரில் எப்பொழுதும் சிறப்பாக விளையாடும் ரஹானேவை, அணியில் இருந்து நீக்கியதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ரஹானேவை நீக்கியது இந்திய வீரர்களுக்கே அதிர்ச்சியளித்திருந்த நிலையில், கோஹ்லியின் இந்த முடிவு தங்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்த்தாக தென் ஆப்ரிக்காவின் கேப்டன் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

முதல் போட்டி குறித்து டூ பிளசிஸ் பேசியதாவது;

இந்திய அணிக்கு குறைந்தது 350 ரன்களாவது டார்கெட் கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் திட்டம், ஆனால் எதிர்பாராத விதமாக இந்திய அணிக்கு 208 ரன்களே எங்களால் இலக்காக நிர்ணயிக்க முடிந்தது, உணவு இடைவேளையின் போது நான் இந்தியாவை எப்படி கட்டுப்படுத்துவது என்றே யோசித்து கொண்டிருந்தேன்.

ஆனால், எனது பயத்தை எங்கள் பந்துவீச்சாளர்கள் தங்களின் வேகத்தின் மூலம் தகர்த்தெறிந்து, இந்தியாவின் பேட்டிங் ஆர்டரையும் தகர்த்துவிட்டனர். பந்துவீச்சே எங்களது வெற்றிக்கு காரணம்.

இந்தியாவின் தோல்விக்கு இவர் இல்லாதது தான் காரணம் ; டூபிளசிஸ் ! 5

நாங்களே ஷாக் ஆகிட்டோம்;

இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் பும்ராஹ் இடம்பெறுவார்கள் என்று நாங்கள் சற்றும் யோசித்து கூட பார்க்கவில்லை. ரஹானே அணியில் நிச்சயம் இருப்பார் என்றே நாங்கள் நினைத்தோம், ஆனால் ரஹானேவை எடுக்காமல் அவருக்கு பதிலாக ரோஹித் சர்மாவை எடுத்த கோஹ்லியின் முடிவு எனக்கே பெரும் அதிர்ச்சியளித்தது என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த போட்டியிலாவது ரஹானே அணியில் இடம்பெற வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமும் கூட.

Leave a comment

Your email address will not be published.