பேசாம எல்லாத்தையும் “பிங்க்”கா மாத்திடனும்… தென் ஆப்ரிக்கா கேப்டன் ஆசை

பிங்க் டே போட்டிகள் தங்களுக்கு எப்பொழுதும் சிறப்பானது என்று தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் மார்கரம் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் மூன்று போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 289 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதனையடுத்து தென் ஆப்ரிக்கா அணியின் பேட்டிங்கின் போது மழை குறுக்கிட்டதால் போட்டியின் ஓவர்கள் 28ஆக குறைக்கப்பட்டு வெற்றி இலக்கும், 202 ஆக குறைக்கப்பட்டது.

மழை நின்றதும் போட்டி துவங்கிய பின், ஆம்லா (33), டிவில்லியர்ஸ் (26), மில்லர் (39) ஆகிய நட்சத்திர வீரர்கள் தங்கள் பங்கை  சரியாக செய்தாலும் அணிக்கு இறுதி வரை இருந்து வெற்றியை பெற்றுத்தரமால் விக்கெட்டை  இழந்து வெளியேறினர்.

இதன் பின் வந்த பெலேகுலாயோ மறுமுனையில் தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஹென்ரிச் க்ளேசனுடன் ஜோடி சேர்ந்து, ஒரே ஓவரிலேயே போட்டியை மாற்றி தென் ஆப்ரிக்கா அணிக்கு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று கொடுத்தார்.

இந்நிலையில்  இந்த வெற்றி குறித்து பேசியுள்ள தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் மார்கரம், பிங்க் டே போட்டிகள் தங்களுக்கு சிறப்பானது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் “பிங்க் டே போட்டிகள் எங்களுக்கு எப்பொழுதும் சிறப்பு வாய்ந்தது. போட்டியில் அடைந்த வெற்றியை விட இந்திய வீரர்களுக்கு கடுமையாக நெருக்கடி கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அடுத்து வரும் போட்டிகளிலும் எங்களால் முடிந்த வரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெல்ல முயற்சி செய்வோம். இந்த வெற்றிக்கு எங்கள் பந்துவீச்சாளர்களும் மிக முக்கிய காரணம. டிவில்லியர்ஸின் வருகையும் எங்களுக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது.  இந்த நாளை எனது வாழ்வில் மறக்கவே முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஐ.சி.சி., நடத்தும் உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களிலும் பிங்க் நிற ஜெர்சியில் விளையாடினால் கூட சிறப்பாக இருக்கும் என்றும் மார்கரம் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனான டூ பிளசிஸ் காயம் காரணமாக ஒட்டுமொத்த தொடரில் இருந்து விலகியதால், இந்திய அணியுடனான இரண்டாவது போட்டியில் தான் மார்கரம் முதன் முறையாக தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில்  இந்திய அணியின் தோல்வி குறித்து கோஹ்லி பேசியதை அறிய.. இங்கே க்ளிக் செய்யவும்.. 

  • SHARE

    விவரம் காண

    முதலிடத்திற்கு முன்னேறினார் முன்ரோ… விராட் கோஹ்லி பின்னடைவு !!

    முதலிடத்திற்கு முன்னேறினார் முன்ரோ… விராட் கோஹ்லி பின்னடைவு சர்வதேச டி.20 பேட்ஸ்மேன்களுக்கான ஐ.சி.சி., தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியின் முன்ரோ முதலிடத்திற்கும், ஆஸ்திரேலிய அணியின்...

    ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் !!

    ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு சச்சின், டிராவிட், சேவாக், அஸ்வின், கைஃப் போன்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள்...

    ரோஹித் சர்மா கேப்டன்… முத்தரப்பு தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !!

    ரோஹித் சர்மா கேப்டன்… முத்தரப்பு தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு முத்தரப்பு தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ., இன்று அறிவித்துள்ளது. இலங்கையின்...

    வீடியோ;  தென் ஆப்ரிக்காவிற்கு மேஜிக் காட்டிய தல தோனி !!

    வீடியோ;  தென் ஆப்ரிக்காவிற்கு மேஜிக் காட்டிய தல தோனி தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று டி.20...

    தென் ஆப்ரிக்காவை காலி செய்த இந்தியா… ட்விட்டரில் தெறிக்கவிடும் ரசிகர்கள் !!

    தென் ஆப்ரிக்காவை காலி செய்த இந்தியா… ட்விட்டரில் தெறிக்கவிடும் ரசிகர்கள் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி.20 தொடரை இந்திய அணி கைப்பற்றியதை சமூக...