இந்தியா மேற்கு இந்திய தீவுகள் 2017 2வது ஒரு நாள் போட்டி : குலதீப் யாதவால் மகிழ்ச்சியில் கோஹ்லி 1

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர்களான அஜிங்க்ய ரஹானே 104 ரன்களும், ஷிகர் தவன் 63 ரன்களும், கேப்டன் கோலி 87 ரன்களும் குவித்தனர்.

போர்ட் ஆப் ஸ்பெயினில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக இரண்டு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதனால் ஆட்டம் 43 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

தாமதமாக துடங்கிய ஆட்டம் :

இந்தியா மேற்கு இந்திய தீவுகள் 2017 2வது ஒரு நாள் போட்டி : குலதீப் யாதவால் மகிழ்ச்சியில் கோஹ்லி 2

 

டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, அஜிங்க்ய ரஹானேவும், ஷிகர் தவனும் இந்தியாவின் இன்னிங்ûஸ தொடங்கினர். ஜோசப் வீசிய முதல் ஓவரில் பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்கிய ரஹானே, ஜோசப் வீசிய 3-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசினார்.

இதன்பிறகு ஷிகர் தவன் பவுண்டரிகளை பறக்கவிட, 10 ஓவர்களில் 63 ரன்களை எட்டியது இந்தியா. ஜோசப் வீசிய 12-ஆவது ஓவரில் ஷிகர் தவன் 3 பவுண்டரிகளை விரட்ட, இந்தியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

தொடர்ந்து வேகம் காட்டிய தவன் 49 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனால் 17 ஓவர்களில் 103 ரன்களை எட்டியது இந்தியா. தொடர்ந்து வேகம் காட்டிய தவன் 59 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சேர்த்த நிலையில் நர்ஸ் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 18.2 ஓவர்களில் 114 ரன்கள் குவித்தது. இதையடுத்து கேப்டன் விராட் கோலி களமிறங்க, ரஹானே 56 பந்துகளில் அரை சதம் கண்டார். கோலியும், ரஹானேவும் அசத்தலாக ஆட, 31.5 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது இந்தியா.

சிறப்பாக விளையாடி சதம் அடித்தார் ரஹானே :

இந்தியா மேற்கு இந்திய தீவுகள் 2017 2வது ஒரு நாள் போட்டி : குலதீப் யாதவால் மகிழ்ச்சியில் கோஹ்லி 3

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரஹானே, கம்மின்ஸ் பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி 102 பந்துகளில் சதமடித்தார். இது ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 4-ஆவது சதமாகும். அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுத்த ரஹானே, அதற்கடுத்த பந்தில் போல்டு ஆனார். அவர் 104 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து வந்த பாண்டியா 4 ரன்களில் நடையைக் கட்ட, யுவராஜ் சிங் களம்புகுந்தார். இதனிடையே 49 பந்துகளில் அரை சதம் கண்ட கோலி, கம்மின்ஸ் பந்துவீச்சில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசினார். இதன்பிறகு யுவராஜ் சிங் 10 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, தோனி களம்புகுந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய கோலி 66 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்து ஜோசப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது இந்தியா. தோனி, கேதார் ஜாதவ் ஆகியோர் தலா 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜோசப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

குலதீப் யாதவை பாராட்டினார் கோஹ்லி :

இந்தியா மேற்கு இந்திய தீவுகள் 2017 2வது ஒரு நாள் போட்டி : குலதீப் யாதவால் மகிழ்ச்சியில் கோஹ்லி 4

நேற்று வெற்றி பெற்ற பிறகு இந்திய கேப்டன் அணைத்து வீரர்களையும் பாராட்டினார் அதிலும் குறிப்பாக இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை பாராட்டியுள்ளார்.

“தவான் மற்றும் ரஹானே சிறப்பாக விளையாடினார்கள் இவர்கள் ஜோடி 100 ரங்களுக்கு மேல் அடித்து அசத்தியுள்ளார்கள், பிறகு நானும் அவர்களுடன் சேர்ந்து ரன்களை உயர்த்தினேன் பிறகு வந்த யுவராஜ் சிங்,தோனி மற்றும் கேதார் ஜாதவ் வந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.”

“பிறகு பந்து வீச்சிலும் இந்திய வீரர்கள் அசத்தியுள்ளார்கள் குறிப்பாக புவனேஸ்வர் குமார் மற்றும் குலதீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி அணியின் வெற்றிக்கு உதவினார்கள்”.

“குலதீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்”.

சிறப்பாக விளையாடிய ரஹானே ஆட்ட நாயகனாக தேர்வு செய்ய பட்டார்.

“நான் சிறப்பாக விளையாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளத,இந்திய அணியில் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் சிறப்பாக புரிந்து கொண்டு நன்றாக விளையாடி வருகிறோம் பந்து வீச்சாளர்களும் அவர்களின் பங்கை சிறப்பாக கொடுத்து உள்ளார்கள்”

இந்த வெற்றியை தொடர்ந்து இந்தியா தனது மூன்றாவது ஒரு நாள் போட்டியில் வரும் 30ஆம் தேதியில் வெள்ளிக்கிழமை அன்று மேற்கு இந்திய தீவுகள் உடன் விளையாட உள்ளது.

அதில் வெற்றி பெற்றால் இந்திய தொடரை வேலும் வாய்ப்பு பிரகாசமாக ஆகி விடும்.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *